நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலி நேரலைகளை அதிகமாக கேட்கும் நாடுகள்

 தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அகில இந்திய வானொலியை விரும்பி கேட்கும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி மற்றும் குவைத் முதல் 10 இடங்களுக்கு முன்னேறியுள்ளன, தமிழ் சேவை அமெரிக்காவில் விரும்பி கேட்கப்படுகிறது


நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலி நேரலைகளை அதிகமாக கேட்கும் நாடுகளின் (இந்தியாவை தவிர்த்து) சமீபத்திய பட்டியலில், ஐந்தாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு ஃபிஜி முன்னேறி உள்ளது. சவுதி அரேபியா பத்தாவது இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது.

முதல் பத்து நாடுகளின் பட்டியலில் குவைத் மற்றும் ஜெர்மனி புதிதாக இடம் பிடித்துள்ள நிலையில் பிரான்சும் நியூசிலாந்தும் அந்த பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளன. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அகில இந்திய வானொலியின் தெலுங்கு மற்றும் தமிழ் நேரலை சேவைகள் அமெரிக்காவில் பிரபலமாக உள்ள நிலையில் அகில இந்திய வானொலியின் பஞ்சாபி சேவை இங்கிலாந்தில் பிரபலமாக உள்ளது.

அகில இந்திய வானொலி செய்திகள் 24*7 சர்வதேச பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ள நிலையில், அகில இந்திய வானொலியின் தமிழ் சேவை ஆறாவது இடத்தில் இருந்து பத்தாவது இடத்திற்கு வந்துள்ளது.

பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர், இருநூற்று நாற்பதுக்கும் அதிகமான வானொலி சேவைகளை நேரலையில் ஒலிபரப்புகிறது. உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளில் இருக்கும் 8,000 நகரங்களிலிருந்து நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள்.

சமீபத்திய தரவரிசை பட்டியல் 2021 ஜூன் 16 முதல் ஜூன் 30 வரையிலான இருவாரங்களுக்கு உரியதாகும். இந்தியா இதில் சேர்க்கப்படவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா