வடகிழக்கு பகுதிக்கான பொருளாதார திட்டங்களை, மாநிலங்களவையில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பகுதிக்கான பொருளாதார திட்டங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

வடகிழக்கு பகுதிக்கான பொருளாதார திட்டங்களை, மாநிலங்களவையில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி இன்று தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

2020ம் ஆண்டு செப்டம்பரில் 17 பகுதிகளின் வளர்ச்சிக்கு 17 துணைக்குழுக்களை நிதி ஆயோக் அமைத்தது. வட கிழக்கு பகுதி திட்டங்களுக்கான மதிப்பீட்டை சம்பந்தப்பட்ட துறைகளும், அமைச்சகங்களும்  மேற்கொண்டன. வடகிழக்கு பகுதி மற்றும் வட கிழக்கு கவுன்சில் வளர்ச்சி அமைச்சகத்தால் அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் மூன்றாம் நபர் மதிப்பீடு முடிவடைந்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கு வடகிழக்கு பகுதி திட்டங்களுக்கு 54 அமைச்சகங்கள்,  துறைகளால் ரூ.68,020 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொவிட் இரண்டாம் அலைக்கு எதிரான போராட்டத்தில், இந்திய பொருளாதாரத்துக்கு உதவ,  கடந்த ஜூன் மாதம், ரூ.6.29 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண நிதியை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பொது சுகாதாரம் வலுப்படும். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வடகிழக்கு பகுதிக்கு பயனளிக்கும்.

ரூ.313.98 கோடி மதிப்பில் 11 திட்டங்களுக்கு வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா