அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்/ கிராம அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் நேரடி முகவர்களுக்கான நேர்காணல்மத்திய மற்றும் மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்ற தொழில்சார் வல்லுநர்களின் நலனுக்காக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கான சந்தைப்படுத்துதல் குழுவின் ஒரு பகுதியாக நேரடி முகவர்களை அஞ்சல் துறை அவ்வப்போது பணியமர்த்தி வருகிறது.

இதன்படி அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்/ கிராம அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு 04.08.2021 அன்று சென்னை தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகம், சென்னை-600001-இல் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள, கீழ் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் பிரதிகள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் தேர்விற்கு வரலாம்.  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், உரிம கட்டணமாக ரூ. 250-ஐ செலுத்த வேண்டும்.

தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள்:

a.       வயது: 28-50

b.       கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமாக மத்திய/ மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி

c.    பிரிவுகள்: வேலை இல்லாதவர்கள்/ சுயமாக பணிபுரியும் கல்வி அறிவுடைய இளைஞர்கள்/ முன்னாள் படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் இந்த அலுவலகத்தின் தலைமையால் தகுதி பெற்றவராகக் கருதப்படும் நபர்.

தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்  ரூ. 5000-ஐ ரொக்க பாதுகாப்பாக செலுத்த வேண்டும்.

இந்தத் தகவல், சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா