ஐ.ஐ.டி மெட்ராஸில் உலகளாவிய நீர் மற்றும் காலநிலை தழுவல் மையம்

நீர்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்ள, ஐ.ஐ.டி மெட்ராஸில் உலகளாவிய நீர் மற்றும் காலநிலை தழுவல் மையம்
நீர்ப்பாதுகாப்பு மற்றும் மாறிவரும் காலநிலைக்குத் தக்கபடி மாறுதல் ஆகியவற்றில் உள்ள உலகளாவிய சவால்களை சமாளிக்க ஜெர்மன் அரசு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் ‘உலகளாவிய நீர் மற்றும் காலநிலைத் தழுவல் மையம்’ என்ற அமைப்பை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் பாங்காக்கின் ஆசிய தொழில்நுட்பக் கழகத்தில் (ஏ.ஐ.டி) ஒரு செயற்கைக்கோள் மையத்துடன் இணைந்து பிரதான மையத்தை நடத்துகிறது. இது ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் ஜெர்மன் கல்வி பரிவர்த்தனைச் சேவையின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் 20 ஜூன் 2021 அன்று திறக்கப்பட்டது

இந்த மையம் German Academic Exchange Service (DAAD) ஆல் உருவாக்கப்பட்டு, டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் RWTH ஆச்சென் பல்கலைக் கழகம் ஆகிய ஜெர்மன் நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு ‘ஏபிசிடி’ (ஆச்சென்-பாங்காக்-சென்னை-டிரெஸ்டன்) என்று பெயரிடப் பட்டுள்ளது.

நான்கு முக்கிய நகரங்களின் புவியியல் ரீதியான அணுகலுடன், ஒரு பொதுவான கருப்பொருள் என்ற ஒற்றைக் குடையின் கீழ் முன்னணி ஜெர்மன் மற்றும் ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையில் இருக்கும் நெட்வொர்க்குகளின் மூலோபாய விரிவாக்கத்தைக் குறிப்பதாக இந்த மையம் விளங்குகிறது.

உலகளாவிய நீர் மற்றும் காலநிலை தழுவல் மையம், உயர்கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் அறிவு பரிமாற்றத்தில் மேலும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்து ஒருங்கிணைத்து விரிவாக்கும் ஒரு செயல்பாட்டு தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஐ.ஐ.டி மெட்ராஸின் பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் எஸ்.ஏ.சன்னசிராஜ் இந்த மையத்திற்குத் தலைமை ஏற்றுள்ளார்.

தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, `இந்தியா, ஜெர்மனி மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் மதிப்பு மிக்க நிறுவனங்களின் இடையேயான சிறந்த ஒத்துழைப்புத் திட்டங்களைப் பாராட்டினார்.  TUD ஜெர்மனியுடனான தனது ஆரம்பகால உறவுகளையும், இப்போது RWTH, ஜெர்மனியுடனான  வலுவான ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்தார். ஐ.ஜி.சி.எஸ்., DAAD போன்ற நிறுவனங்களின்  முதுநிலை மற்றும் முனைவர் மாணவர்களுக்கான  பரிமாற்றத் திட்டங்களுடன் இந்தப்  புதிய முயற்சி,  நீர்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் துறையில் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பைக் கொண்டு வரும்’ என்றார்.

இந்தத் தகவல் ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா