ராஜஸ்தானில் பழங்குடியினர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் காதியின் மூங்கில் சோலை திட்டம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் ராஜஸ்தானில் பழங்குடியினர் வருவாய் மற்றும் மூங்கில் சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் காதியின் மூங்கில் சோலை திட்டம்

ராஜஸ்தானில் பழங்குடியினர் வருவாய் மற்றும் மூங்கில் சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை திட்டம் என்ற தனித்துவமான திட்டத்தை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது.

பாலைவனப்பகுதியை குறைக்கவும், வாழ்வாதாரத்தை அளிக்கவும், பல்நோக்கு ஊரக தொழில் உதவியை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது

இத்திட்டத்துக்கு வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை (“Bamboo Oasis on Lands in Drought” (BOLD) என பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த திட்டம் ராஜஸ்தானின்  உதய்பூர் மாவட்டத்தில் நிக்லாமண்டவா என்ற பழங்குடியின கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘பம்புசா துல்தா’ மற்றும் ‘பம்புசா பாலிமார்பா’ என்ற இரு வகைகளைச் சேர்ந்த 5000 மூங்கில் கன்றுகள் சுமார் 16 ஏக்கர் கிராம பஞ்சாயத்து நிலத்தில் நடப்பட்டன. இதன் மூலம் ஒரேநாளில், ஒரே இடத்தில் அதிக மூங்கில் கன்றுகளை நட்டு காதி கிராமத் தொழில் ஆணையம் உலக சாதனை படைத்துள்ளது.


இந்த மூங்கில் சோலை திட்டம் வறண்ட மற்றும் பாதி வறண்ட மண்டலங்களில் பசுமையை ஏற்படுத்த முற்படுகிறது. நிலம் சீரழிவு மற்றும் பாலவனமாவதை தடுக்க வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்போடு இத்திட்டம் இணைந்துள்ளது.

நாட்டின் 75 வது சுதந்திர ஆண்டை கொண்டாட காதி கிராமத் தொழில் ஆணையம் நடத்தும்  காதி மூங்கில் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.  இதே திட்டத்தை குஜராத் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோலேரா கிராமம், மற்றும் லே-லடாக் பகுதியிலும் காதி கிராமத் தொழில் ஆணையம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 21ம் தேதிக்கு முன்பாக மொத்தம் 15,000 மூங்கில் கன்றுகள் நடப்படும்.

இது குறித்து காதி கிராமத் தொழில் ஆணையத் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறுகையில், ‘‘ இந்த மூன்று இடங்களில் மூங்கில் வளர்ப்பது, நாட்டின் நிலச் சீரழிவு சதவீதத்தை குறைக்க உதவும் அதே நேரத்தில் நிலையான வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்புக்கு புகலிடங்களாக  இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா