முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு

 பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு


டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உயரே, உயரே எழும்புகிறீர்கள்! தொடர்சியான, சிறப்பான செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக மாரியப்பன் தங்கவேலு திகழ்கிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையைக் கண்டு இந்தியா பெருமையடைகிறது. @189thangavelu #Paralympics #Praise4Para,” என்று  தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில்

                                                      பாரலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு
ஜப்பான் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தடம் பதிக்கின்றனர். இதுவரை 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் இரண்டு மணிநேரத்தில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது.


இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியா பதக்கம்  தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உட்பட, மூவர் கலந்துகொண்டனர். இந்திய நேரப்படி மாலை 3.55 மணிக்கு தொடங்கிய போட்டியில், தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு, 1.86 மீ உயரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தது பதக்கம் உறுதி செய்தார்.

தொடர்ந்து பங்கேற்றவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருடன் சேர்ந்து இந்தியாவின் சரத்குமார், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரிக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிகிறது.

2016 ல் ரியோ-வில் நடைப்பெற்ற ‘பாராலிம்பிக்ஸ்’ போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு. ஏழ்மை மற்றும் வறுமை நிலையிலிருந்து வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்த உலகிற்கு உயரமாய் தாண்டினார் மாரியப்பன். 21 வயதில் தங்கப் பதக்கம் வென்றார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவடாகம்பட்டி கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவர் மாரியப்பன். தாயார் சரோஜா வீட்டின் ஏழ்மை நிலையை சமாளித்து தனியாக குடும்பத்தை நிர்வாகிக்க.

சரோஜா கல் சுமந்து தினக்கூலியாக வேலை செய்தார். பின்னர் பூ மற்றும் காய்கறிகள் விற்றார். ஐந்து வயதிருக்கும் போது மாரியப்பன் பள்ளிக்கு நடந்து சென்ற போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. பஸ் ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் மாரியப்பனின் முழங்காலுக்கு கீழ் நசுங்கியது



“இன்னும் என்னுடைய காலுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. அது வளரவும் இல்லை குணமாகவும் இல்லை,” என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் மாரியப்பன்.
அவரது தாயார் தனியாக மாரியப்பனின் சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய் திரட்டினார்.  விபத்திற்குப்பின் சிதைந்தது போன வலது காலில், கட்டைவிரல் மட்டுமே இருந்தது. அதனுடன் வாழ்கிறார் மாரியப்பன். இருப்பினும் அந்த விரலின் உதவியுடன் தான் பதக்கம் வெல்லும் அளவிற்கு அவரால் உயரம் தாண்டமுடிந்தது என்பதால் அவர் அதைக் ‘கடவுள்’ என்கிறார். தொடர்ந்து பங்கேற்றவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருடன் சேர்ந்து இந்தியாவின் சரத்குமார், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது.




2016 ஆம் ஆண்டில் ரியோ-வில் நடைப்பெற்ற ‘பாராலிம்பிக்ஸ்’ போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றார் மாரியப்பன் தங்கவேலு. ஏழ்மை மற்றும் வறுமை நிலையிலிருந்து வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்த உலகிற்கு உயரத் தாண்டினார் மாரியப்பன். எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும் என்பதற்கேற்ப 21 வயதில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.    ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் 1.70 மீ உயரத்துக்கான மார்க்கில் தங்கவேலு 1.73 மீட்டர் உயரம் தாண்டினார். அடுத்த சுற்றில் 1.77 மீட்டராக உயரம் அதிகரிக்கப்பட்டது. 1.77 மீட்டர், 1.80 மீட்டர் எனத் தொடர்ந்து மாரியப்பன் உயரத்தைக் கடந்து சென்றார். 1.83 மீட்டர் உயரத்தை முதல் முயற்சியிலேயே தங்கவேலு கடந்தார். 1.86 மீட்டர் உயரத்தை மூன்றாவது முயற்சியில் கடந்தார். 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதில் முதல் இரு முயற்சிகளிலும் இந்தியாவின் தங்கவேலுவும்,   அமெரிக்காவின் சாம் கிரீவும் தோல்வி அடைந்தனர். 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வீரர் சாம் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதால்,   மாரியப்பன்               தங்கவேலு தாண்ட முடியாததால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.         
இவர் சென்ற விமானத்தில் யாரோ ஒருவர் கொரானோ பாதிப்புகள் இருந்து அதன் காரணமாக ஜப்பான் டோக்கியோவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர் பதக்கம் வென்று  பாராட்டப்படுகிறார்.         டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பனிடம் இன்று காலை மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தொலைபேசியில் பேசி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 


தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தொடர்ந்து 2 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றிருப்பது வரலாற்று சாதனை. 

மற்ற மாநிலங்களில் அந்த மாநில அரசுகள் Group 1 பணி கொடுத்து ஊக்கப்படுத்துவது போல், தமிழக அரசும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள மாரியப்பனுக்கு Group-1 பணி வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...