தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு


தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய அரசு ஆய்வு

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன.

கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கொவிட் மேலாண்மைக்காக சுகாதார அதிகாரிகளால் இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த மாநிலங்களில் அன்றாட கொவிட் பாதிப்பு அல்லது தொற்று உறுதி விகிதம் அதிகரித்து வருகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவாவும் கூட்டத்தில் பங்கேற்றார்.‌ முதன்மைச் செயலாளர் (சுகாதாரம்), தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர், மாநிலங்களின் கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தேசிய அளவிலான செரோ பரவல் ஆய்வு, பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து அதே நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலங்களில் மாவட்ட அளவிலான நோய் பரவும் தரவுகளுக்காக  தங்கள் மாநில அளவிலான செரோ ஆய்வை நடத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ஆலோசனை:

பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகும் தொகுப்புகளில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது.

பாதிப்புகளின் விவரணையாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிந்ததன் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்ணயிப்பது.

 தற்போதைய மருத்துவ உள்கட்டமைப்பை, குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக அவசரகால கொவிட்- 19 நடவடிக்கை தொகுப்பு-II-ஐ பயன்படுத்தி, அதனை அவ்வப்போது ஆய்வு செய்வது.

  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா