சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறை துறை, தீயணைப்பு, ஊர்க்காவல், சமூக பாதுகாப்பு படையினருடன் 1380 காவல் பணியாளர்களுக்கு விருது

 உள்துறை அமைச்சகம் சிறை துறையினருக்கான திருத்த சேவை விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு விருது


இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த சிறைத் துறையினர் 4 பேர்  உட்பட, 41 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான  திருத்த சேவை விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சிறைத்துறையைச் சேர்ந்த உதவி சிறைக்காவலர்கள் திரு ஜி. முனிராஜா, திரு கே. பாண்டி, திரு ஜி. பெருமாள், தலைமை வார்டர் திரு என். குமாரவேல் ஆகியோர் போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகளைப் பெற்றுள்ளனர்.
உள்துறை அமைச்சகம்

தீயணைப்பு, ஊர்க்காவல், சமூக பாதுகாப்பு படையினருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்பு, ஊர்க்காவல் மற்றும் சமூக பாதுகாப்பு படையினருக்கு குடியரசுத் தலைவரின் வீரதீர பதக்கங்கள், சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள், வீரதீர பதக்கங்கள் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

2021-ம் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு சேவை விருதுகளுக்கு 86 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேருக்கு தீயணைப்பு வீரதீர பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள் 10 நபர்களுக்கும், சிறப்பான சேவைக்கான தீயணைப்பு பதக்கங்கள் 50 பேருக்கும் வழங்கப்படுகின்றன.

மேலும், 55 நபர்களுக்கு ஊர்க்காவல் மற்றும் சமூக பாதுகாப்பு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களில் ஐந்து பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் ஊர்க்காவல் படை மற்றும் சமூக பாதுகாப்பு பதக்கங்களும், 50 பேருக்கு சிறப்பான பணிக்கான சமூக பாதுகாப்பு பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

உள்துறை அமைச்சகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1380 காவல் பணியாளர்களுக்கு விருது

2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,380 காவல் பணியாளர்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டன.  மிகவும் குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற சேவைக்கான குடியரசுத்தலைவர் காவல் பதக்கங்கள் 2 காவல்துறைப் பணியாளர்களுக்கும், மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் 628 பேருக்கும் வழங்கப்பட்டன. சிறப்பாகப் பணியாற்றுவதற்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் 88 பேருக்கும், போற்றத்தக்க வகையில் சேவையாற்றியதற்கான காவல் பதக்கம் 662 பேருக்கும் அளிக்கப்பட்டன.

ஜம்மு  காஷ்மீர் பகுதியில் மகத்தான பணி ஆற்றிய 398 பேருக்கும், இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் மகத்தான பணியாற்றிய 155 பேருக்கும், வடகிழக்குப்பகுதியில் மகத்தான பணியாற்றிய 27 பேருக்கும் வழங்கப்பட்டன. மகத்தான வீரச்செயல் காவல் பதக்கங்கள் பெற்றவர்களில் 256 பேர் ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், 151 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள், 23 பேர் இந்தோ- திபெத் எல்லை  பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள், 67 பேர் ஒடிசா காவல் துறையையும் 25 பேர் மகாராஷ்டிராவையும், 20 பேர் சத்தீஸ்கரையும் சேர்ந்தவர்கள். இதர நபர்கள் இதர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஆயுதக்காவல் படைகளைச் சேர்ந்தவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்