கூடுதலாக வங்கி ஏடிஎம் பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது

 வங்கிகளின் ஏடிஎம்களில்அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி கூடுதலாக பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.                       மேலும் விடுமுறை நாடகளில் தவனை முறை இஎம்ஐ எடுப்பதும்  அமலுக்கு வருகிறது. விடுமுறை நாள் என்றாலும், அன்றைய நாள் சம்பளம் வருவதும் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது வங்கிகள் வழியாக பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது இன்டர்சேஞ்ச் கட்டணமென அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அதே போல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூபாய் .5 லிருந்து, ரூபாய் .6 எனவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய உயர்வு விகிதங்கள் பணம் மறுசுழற்சி இயந்திரங்களில்  செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா