ரஷ்யாவில் 2021 சர்வதேச இராணுவ விளையாட்டுகளில் இந்திய இராணுவம் பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சகம் ரஷ்யாவில் 2021 சர்வதேச இராணுவ விளையாட்டுகளில் இந்திய இராணுவம் பங்கேற்புஇந்த மாதம் (ஆகஸ்ட்) 22ந் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது. இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களைக் காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்த குழுவைச் இருவர் பார்வையாளர்களாக இருப்பர்.  

முன்னதாக, 2019 -ல் ஜெய்சால்மரில் நடந்த ராணுவ சாரணர் மாஸ்டர் போட்டியில் பங்கேற்ற எட்டு நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்