பாதுகாப்பு தளவாட பரிசோதனை உள்கட்டமைப்பு திட்டம் ரூ.400 கோடி செலவில் தொடக்கம்

பாதுகாப்பு அமைச்சகம்  பாதுகாப்பு தளவாட பரிசோதனை உள்கட்டமைப்பு திட்டம்பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க, பாதுகாப்புத்துறை அமைச்சகம், ‘பாதுகாப்பு தளவாட பரிசோதனை உள்கட்டமைப்பு திட்டத்தை (DTIS) ரூ.400 கோடி செலவில் தொடங்கியுள்ளது.

இந்த நவீன பரிசோதனை உள்கட்டமைப்பு,  தனியார் நிறுவனத்துடன்  இணைந்து அமைக்கப்படும்.  இத்திட்டம், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கால் கடந்த 2020ம் ஆண்டு மே 8ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு செயல்படும்.  இதன் மூலம் புதிதாக  6 முதல் 8 பாதுகாப்பு தளவாட பரிசோதனை உள்கட்டமைப்பு மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான பொருட்கள் தயாரிப்புக்கு தேவைப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மத்திய அரசு 75 சதவீதம் வரை  மானிய உதவி அளிக்கும்.  இத்திட்டத்தின் 25 சதவீத செலவை இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் ஏற்க வேண்டும்.  இது தொடர்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில், பாதுகாப்பு பரிசோதனை மையங்களை அமைக்க  ராணுவ தளவாட உற்பத்தி துறை / தர உறுதி இயக்குனரகம் 8 ஒப்பந்த அறிக்கையை கோரியுள்ளது.  இது https://eprocure.gov.in மற்றும் https://ddpmod.gov.in இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்மொழிவுக்கான கோரிக்கைகளும் விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்