முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

63 நாயன்மார்களில் அணைத்து ஜாதி உள்ள போது அர்ச்சகரில் பாகுபாடு தேவையா அங்கும் வரட்டும் பூசலாரும், நந்தனாரும்

இந்து சமய அறநிலையத் துறைச் சட்டப்படி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் அர்ச்சகர், ஓதுவார், பூசாரிகளை நியமிக்கும் பிரச்சினையில் பாஜகவின் மூத்த தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட தகவலின்படி அதிகாரம் அறங்காவலருக்கு மட்டுமே உள்ளது. கோவிலை நிர்வாகம் செய்யும் அதிகாரமும் அறங்காவலருக்கே உள்ளது. சட்டம் இப்படி இருக்க, கோயில்களில் அர்ச்சகர்களை

நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வருக்கு யார் கொடுத்தது?      தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக உரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வாதாடியதனால், சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நடராஜர் கோவில் வழக்கில் பரம்பரை அர்ச்சகர்கள் உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. இத்தகைய சூழலில், அர்ச்சகர்களை நியமிக்கும் அறங்காவலர்களின் உரிமையில் அரசு தலையிட்டிருப்பது தவறான முடிவு. எனவே, பல்வேறு சட்டங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன் என பாஜகவின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த நிலையில் தற்போது நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தமிழக கோவில் அர்ச்சகர் நியமன பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. சட்டப்பேரவையில், ஆகஸ்ட்  மாதம் 17 ஆம் தேதி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள் யாரும் அகற்றப்படவில்லை. அகற்றும் திட்டமும் அரசிடம் இல்லை. 60 வயதைக் கடந்து ஓய்வு பெறும் அர்ச்சகர்களுக்கு தகுந்த பணி வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம், இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார். இருப்பினும்         கோவில்கள் தோறும் திருப்பணியாளர்களின் பொன்னடி படட்டுமே.

திருவரங்கத்தில் இராமானுஷர் புதிதாக மடம் ஒன்றைக் கட்டினார் மடத்துக்கு முறைப்படியான கிரஹபிரவேஷம் வைத்திருந்தார். 

அதற்கு முதல்நாள் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாரநேரி நம்பி கூறியிருக்கிறார். “நாளை கிரஹ பிரவேஷம் நடந்த பின் என்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் எனவே முதல் நாளே என்னை அந்த மடத்துக்கு அழைத்து செல்லுங்கள், இராமானுஷரின் மடத்தை நான் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 
அவரை இராமானுஜரின் சிஷ்யன் முதலியாண்டான் மடத்துக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளார்.

இந்தச் செய்தியை அன்று மாலை முதலியாண்டான் இராமானுஜரிடம் தெரிவிக்கிறார், 

இராமானுஜரோ, “மாரநேரி நம்பி எல்லா இடத்துக்கும் போய் பார்த்தாரா?” எனக்கேட்டாராம்.

அதற்கு முதலியாண்டான் “ ஆம்“ என பதில் கூறியிருக்கிறார்.

“சமையலறைக்குப் போனாரா?” எனக்கேட்டாராம்.

“ஆம்” என்றாராம் முதலியாண்டான்.

“பூஜை அறைக்கு போனாரா?” எனக்கேட்டாராம்.

“ஆம்” என்றாராம் முதலியாண்டான்.

“ஒரு பரமபாகவதருடைய பொன்னடி பட்டதால் மடம் புனிதமடைந்துவிட்டது, எனவே நாளை கிரஹப் பிரவேஷம் தேவையில்லை” என்று இராமானுஜர் கூறியதாக “இராமானுஜரின் குரு பரம்பரை பிரவாஹம்” கூறுகிறது.

ஆனால் சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடப்பது வியப்பாக இருக்கிறது.


வடமொழியை முதன்மையாக கொண்ட  வடகலை பட்டாச்சாரியார்,                தமிழை முதன்மையாக கொண்ட தென்கலையை பட்டாச்சாரியாரை அர்ச்சகராக அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கிறார்.

சாத்தூர் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவிலில் காலியாக இருந்த பட்டாச்சாரியார் பணியிடத்தில் ஓய்வு பெற்ற பின்பும் 69 வயதான இரங்கநாத பட்டர், ஏழு வருடங்களாக தற்காலிகமாக பணிபுரிந்து வந்திருக்கிறார். அந்தக் காலி பணியிடத்திற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஸ்ரீனிவாசன் என்ற தென்கலை பிராமணர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இளைஞர்கள் இறை திருப்பணி  செய்திட அனுபவமிக்க சமயச் சான்றோர் வழிவிட்டு,வழிகாட்ட வேண்டும். 

ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யுரை பரப்புபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரே ஒரு கேள்வி தான்.


சாதி இந்துக்கள் என்றான பின்பு பயிற்சி பெற்ற பின்பு ஆகம விதிப்படி கோவில் பூசாரி ஆவதில் என்ன சிக்கலைக் காண்கின்றீர்கள்?

படித்துத் தகுதித் தேர்வு எழுதி மருத்துவர் ஆகணும்னு சொன்னா ஆதரிக்கும் போது,தகுதி பெற்ற ஒருவர் பூசாரி ஆவதில் என்ன சிக்கல்?

ஏன் இத்தகைய கூப்பாடு? இத்தனை நாளாக நாமெல்லாம் இந்து.

நமது நாடு இந்திய தேசம் என்றீர்கள்!

இன்று ஒரு இந்து படித்து இறைவனின் சேவைகள் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் செல்லும் நீங்கள் இந்தக் கோயில்களை கட்டியது யார் என்று கண்டீர்கள்?

அதை எப்படி ஏற்கிறார்கள்?

இறைவனுக்கு படைக்கும் படையல் யார் உழுது விளைவிக்கும் அரிசி?

அடிக்கும் மணி செய்த கலன் எது  ?

எரியும் எண்ணெய்யும் கற்பூரமும் யார் செய்தது ?

ஊதுபத்தி செய்து?

மலர்கள் தொடுத்தது ?

எங்கு உற்பத்தி ஆகின?

சமயமா?

சாதியா?

அதையும் கடந்து இந்துக்கள் இல்லை என்று தீர்மானிக்கும் ஆம் 

தீர்மானிக்கும் நேரம் வந்தது

சிலநாட்களாக சைவம்  வைணவ உலகம் மாட்டுமன்றி பொதுமக்களும் அனேகர் உச்சரிக்கும் ஒரு விஷயம்

அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விரோதம் நடந்துள்ளதே!  இது உண்மையா? இல்லையா? என்பதாகும்.

பொதுமக்களன்றியும் சைவ உலகினரே ஆகமம் பற்றிய புரிதலில்லாமல், ஆகமப்படி அமைந்த ஆலயங்களில் சைவ ஆச்சர்யர்களன்றி வேறு யாரும் பண்ணக்கூடாதா பண்ணினால் என்ன தப்பு? புதிதாக வந்தவரும் ஆகமம்படித்து வந்தவர் தானே. எனில் என்ன குறை என ஒருவாறு குழம்பியவாறே நடுநிலையாக நிற்பதாக எண்ணிக்கொண்டு கேட்கின்றனர்.

ஆகமம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ள ஒரே தமிழ் நூல், காலத்தினால் அறியவொண்ணாத திருமூல தேவ நாயனாரின் திருமந்திரம்.

அவரே ஆகமங்களை வரிசைப்படுத்துகையில், கீழ்கண்டவாறு உரைக்கின்றார்.

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்

துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

இவையணைத்தும் சமஸ்கிருத ஆகமங்களாகும். இவற்றினுள் கூறப்பட்டுள்ளவற்றை மீறாது கொள்வதே சிவ வழிபாடு என்கின்றார்.

முதல்தந்திரத்தில் வேதசிறப்பு ஆகமசிறப்பு என வரிசைப்படுத்தி பாடியுள்ள திருமூலதேவநாயனாரின் கீழ்க்கண்ட பாடலும் அதற்குரிய விளக்கமாக திருக்கயிலாயப்பரம்பரை மேன்மைகொள் சைவ ஆதினப்பீடமான தருமை ஆதினம் ஆசிரியர் முனைவர். சி. அருணைவடிவேல் முதலியார் அவர்களின் பொழிப்புரையும் குறிப்புரையும் காண்க.  Thevaaram.org*

திருமந்திரம்:

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்

றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து

ஆரிய மும்தமி ழும் உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய்தானே 

பொழிப்புரை:

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

குறிப்புரை:

`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால், 

*வடமொழியைப்பாணினிக்குவகுத்தருளி அதற்கிணையாத்தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந்தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்`

 - காஞ்சிப்புராணம்

என்றலே சிவநெறி மரபு என்க.

பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,

`தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26

என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`.      (தி.1 ப.77 பா.4) `ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!

மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். 

அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும்

அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழி யினாலாம். 

சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். 

சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமை* யினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழி யினால். 

சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. 

இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, சொற்பிரிவிலாத மறை``                       தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை* அறிக. 

எழுதா மறை` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.

`ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்``- திருவள்ளுவமாலை. 15

என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. 

எனவே, எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` ( தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.

இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.

`மன்னு மாமலை மகேந்திர மதனிற்சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்`

-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10

`கேவேடராகிக்கெளிறது படுத்துமாவேட்டாகிய ஆகமம்வாங்கியும் மற்றவை தம்மைமகேந்திரத்திருந்

துற்ற ஐம்முகங்களாற்பணித் தருளியும்`  - தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்

துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே

தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய

உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.

-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.

என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.

சிவ சிவ 

ஆனால் சிவனடியார் பெருமக்கள், சைவர்கள், அன்பர்கள், பக்தர்கள், பொது மக்கள் குழம்பிடாது மொழிபேதம், பிரிவினை இன்றி அவரவர் கடமையினை அவரவர் செய்வோம்.

இத்தகு கபடவேட நாடக தாரிகளுக்குத் துணைபோகும் உள்ளிருந்து கெடுக்கும் சில கோடாரிக்காம்புகளிடமும் எச்சரிக்கையாக இருக்கவும்.

நடுநிலைபோல பேசுவர். தமிழ்மொழி ஆர்வலராக இருப்பர். ஒடுக்கப்பட்ட இனத்திற்காக பேசுவர்.

தமிழ்மொழியின் பற்றினை இந்து மதத்தில் மட்டும் புகுத்தவேண்டுமெனப்பேசுவர் பலர் வேற்று மொழி தாய் மொழியாக இருக்கும் .

ஈவேராமசாமியை உயர்த்துவர்.

இதுதான் இவர்களது அடையாளம்.

எச்சரிக்கை! என் பலர் தற்போது குதித்து வரும் நிலை காண்கிறோம்.

நாட்டிலே தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் எத்துணையோ இருக்க இந்துக்களின் கடவுள் வழிபாட்டினிலே* சைவம்/வைணவம்/சாக்தம் அல்லது சாக்கியம்/குமாரம் அல்லது கௌமாரம்/கணாபத்யம்/சூர்யம் அல்லது பௌத்த சமயத்திலே *குழப்பம் ஏன் நமது வினா இது வினாயகர் ஆலயம் பூஜை செய்ய வரும் அந்தணர் முருகன் கோவில் பூஜை செய்ய மறுத்து விட காரணம் உண்டா.?. அங்கு ஆன்டிப் பண்டாரம்  தானே பூஜை, அய்யனார் கோவில், காளி கோவில், கருப்பன் ஆலயம் அந்தணர் பூஜை முறை எப்போதும் இருந்ததில்லை குலாளர் எனும் வேளார் சமூகம் தான் நிரந்தர பூஜகர் மற்றும் கம்பர் வழி வந்த உவச்சர் அல்லது பட்டர் தான் பூஜை எல்லை காவல் காக்கும் குல தெய்வ ஆலயங்கள் பலவற்றில் ஆந்திர தாசரிகள் தான் பூஜகர் அதனால் அந்தணர்கள் போராட்டம் நியாயமில்லை என்பதே பொது நீதி 63 நாயன்மார்கள் 63 ஜாதி என்பது உண்மை எனில் ஆகம விதிப்படி மாறாது அர்ச்சகராக வருவது தவறானதல்ல.நல்ல முன்னெடுப்பு ஆனால் தேர்தல் அரசியலில் தேவைப்படாத தேவர் நினைவில்லம் இப்போது பலரது ஆண்மீகத்தைக் காக்க தேவையான ஒன்றாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன