அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா சர் மகன் சிலை மீது கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் இடைநீக்கம்

அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பல் மருத்துவ கல்லூரியில் படிக்கும் பயிற்சி மருத்துவரது


பிறந்தநாளைக் கொண்டாடிய அவருடன் படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சி   மருத்துவர்கள், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்து பல் மருத்துவமனை அருகிலிருந்த ராஜாசர் எம். அண்ணாமலை செட்டியார் மகன் எம்.ஏ.முத்தையா செட்டியார் சிலையின் தலை மீது கேக் வைத்து அவர்கள் கூட வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி அதை காணொளிகள் காட்சியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடவே தற்போது சமூக வலைதளங்களில் அதை பலர் வைரலாக்கியதில் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் மகனான எம.ஏ.முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததாக தற்போது பயிற்சி  மருத்துவர்கள் 8 நபர்கள் பல் மருத்துவக்கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் எம்.ஏ.முத்தையா செட்டியாரின் சிலையை

அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இதற்கிடையே இடைநீக்கம் செய்யப்பட்ட பல் மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 8 பேரும், புதிய  காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.அதில் ‘நாங்கள் செய்தது தவறு, எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். தற்போது இந்தக் காணொளியும் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு காரணம் இப்போது எல்லாம் அந்த மாணவர்களின் பெற்றோர் அவர்களை வளர்க்கும் போது வரலாறு, பண்பாடு, பொது ஒழுங்கு  கூறுவது இல்லை அதுவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறக் காரணமாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா