இந்திய கடற்படை கப்பல்கள் ஷிவாலிக் மற்றும் காட்மாட் இந்திய-புருனே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புருனே சென்றன

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய-புருனே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புருனே சென்றன இந்திய கடற்படை கப்பல்கள் ஷிவாலிக் மற்றும் காட்மாட்


இந்தியாவின் 'கிழக்கை செயல்படுத்துக’ கொள்கைக்கு இணங்க இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் காட்மாட், இன்று (ஆகஸ்ட் 9, 2021) புருனே நாட்டின் முவராவை சென்றடைந்தன. இந்த பயணத்தின்போது புருனே நாட்டு கடற்படையுடன் பல்வேறு இருதரப்பு தொழில்சார்ந்த கலந்துரையாடல்களில் இரு கப்பல்களின் குழுவினரும் பங்கு பெறுவார்கள்.

இருநாடுகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்தவும், சிறந்த நடைமுறைகளில் இருந்து பயன்பெறவும், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகள் பற்றிய பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும் இந்த பயிற்சி இரண்டு கடற்படைகளுக்கும் ஓர் வாய்ப்பாக அமையும். இரு நாடுகளின் கடற்படைகளிடையேயான வலுவான இணைப்பை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ள துறைமுகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கடல் பயிற்சிகள், இந்திய-புருனே பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கிய மேலும் ஒரு நடவடிக்கையாக அமையும்.‌ ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்த இருதரப்பு பயிற்சிகள் நிறைவடையும்.

கொவிட்- 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து கலந்துரையாடல்களும், பயிற்சிகளும் தொடர்பற்ற வகையில் மேற்கொள்ளப்படும்.

ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் காட்மாட், ஆகியவை கிழக்கு கடற்படை தலைமையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நவீனரக கப்பல்கள் ஆகும். பல்வேறு ஆயுதங்கள் மற்றும் உணரிகள் பொருத்தப்பட்டு ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த இரண்டு கப்பல்கள், இந்தியாவின் போர் கட்டமைப்பு திறன்களை எடுத்துரைக்கும்.

புருனே கடற்படையுடனான பயிற்சியை நிறைவு செய்த பிறகு இந்தக் கப்பல்கள்,  ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கடற்படைகளுடன் நடைபெறும் மலபார்-21 பயிற்சியில் கலந்துகொள்வதற்காக குவாம் செல்லும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்