தேசிய கனிம ஆய்வு அமைப்பை, தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

சுரங்கங்கள் அமைச்சகம்  தேசிய கனிம ஆய்வு அமைப்பை, தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்தேசிய கனிம ஆய்வு அமைப்பை (NMET),  தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும் என மத்திய கனிமவள அமைச்சக அதிகாரிகளை மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

தேசிய கனிம ஆய்வு அமைப்பின் 3வது நிர்வாக வாரிய கூட்டத்தில், மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி இன்று கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா போன்ற கனிம வளங்கள் மிகுந்த நாட்டில், கனிம ஆராய்ச்சிக்கு அதிக உந்துதல் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கனிமங்களின் இறக்குமதியை குறைக்க முடியும். இத்துறையில் அதிக நிறுவனங்களை ஈர்க்க, கனிம ஆய்வுத்துறையில் உள்ள கடுமையான நிலைகள் நீக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் கனிம ஆய்வு முயற்சிகளுடன், தங்கம் மற்றும் அரியவகை கனிமங்கள் குறித்த ஆய்விலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கனிம வளங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆய்வுகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு நிதியதவி அளிக்கும் முறைகளை ஒழுங்கப்படுத்த வேண்டும்.

ஆய்வு நடவடிக்கைக்கு, மாநிலங்கள் இடையே போட்டி சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். மாநிலங்களுடன் கனிமவள ஆய்வை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்களை அடிக்கடி நடத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, நிலக்கரித்துறை இணையமைச்சர் திரு ராவ் சாஹிப் பாட்டீல் தான்வே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா