நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம்.

நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம்.பிரபல நடிகையான நல்லெண்ணெய் விளம்பர மாடல் சித்ரா மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு வராமல் கொலஸ்டிரால் குறையும் என  ஒரு எண்ணைக் கம்பெனி விளம்பரத்தில் நடித்தவர் கொலஸ்டிரால் வந்ததால் அவருக்கு வயது 56.வயதிலேயே மரணம் ஏற்பட்டது.

1986, 1990 ஆம் ஆண்டுகளில் பிரபல குனசித்திர நடிகையாக நடித்தவர் சித்ரா. பல சித்ராக்கள் இருந்ததால் இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த நல்லெண்ணெய் சித்ரா என கோடம்பாக்கம் கோலிவுட்டில் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி எனபா பல மொழிகளில் நடித்த சித்ரா  1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்தவர், பிக் பாஸ், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து பேட்டியளித்து மீண்டும் திரைக்கு வந்தார்.இந்நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள லோகியா தெருவில் மகளுடன் வசித்து வந்த நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். சித்ராவின் திடீர் மரணத்தை அறிந்த திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முகவரி : நடிகை சித்ரா , 1 ஏ-தியாகி லோகையா தெரு, சாலிக்கிராமம்,சென்னை -93 தொலைபேசி +91 99621 09666

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்