பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கத்தை முன்னிட்டு இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து


டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்படவிருப்பதை முன்னிட்டு, இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தியக் குழுவினருக்கு எனது நல்வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்கும் அனைத்து தடகள வீரர்களால் நாம் பெருமையடைகிறோம்”, என்று குறிப்பிட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்


பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்: இந்தியாவின் நீர் விளையாட்டு வீரர்கள் நம்பிக்கை

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில், சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவோம் என, நீர் விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும், இந்தியாவின் நீர் விளையாட்டுக்கள் குழுவில் 3 பேர் உள்ளனர். இதில் 2 பேர் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஆண்கள். ஒருவர் படகு போட்டியில் பங்கேற்கும் வீராங்கனை.

இவர்களில் சுயாஸ்ஜாதவ், பாரா ஒலிம்பிக் போட்டியில் 2வது முறையாக பங்கேற்கிறார். நிரஞ்சன் முகுந்தன் மற்றும் பிரச்சி யாதவ் ஆகியோர் முதல் முறையாக பங்கேற்கின்றனர்.


2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் சுயாஷ்ஜாதவ் பெற்ற வெற்றி அவரை டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் நுழைய வைத்தது.  ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றதும், டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வைத்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்