ஆவணி அவிட்டம் ஆண்கள் பூனூல் விழாவும் பெண்கள் ராக்கி விழாவும் ஒருசாரார் கொண்டாட்டம் தலைவர்கள் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் பெண்களின் கவுரவத்தை


நிலைநிறுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்


ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, ஒவ்வொருவரும் பெண்களின் கவுரவத்தை நிலைநிறுத்த  வேண்டும் என்றும், எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக பெங்களூரு வந்த திரு வெங்கையா நாயுடு, ராஜ்பவனில் பல்வேறு பள்ளிக் குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார். ரக்‌ஷா பந்தன் தினத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையேயான ஆழமான அன்பு மற்றும் மரியாதையின் சிறப்பு கொண்டாட்டம் ரக்‌ஷா பந்தன் என கூறினார். 


அனைவரையும் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளாக கருத வேண்டும் என மக்களை வலியுறுத்திய திரு. வெங்கையா நாயுடு,  இது மக்களிடையே சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் மற்றும் நமது நாட்டை வலிமையாக்கும் என கூறினார்.


பழங்கால இந்திய குடும்பமுறையை பாராட்டிய அவர், இது மூத்தோர்களை மதிக்க கற்றுக் கொடுக்கிறது  மற்றும் இளம் வயதினர் இடையே பகிர்தல் மற்றும் கவனிப்பு உணர்வை வளர்க்கிறது என கூறினார். வீட்டில் சகோதரிகள் உற்சாகத்தையும் மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்ட அவர், குடும்ப உறவுகளை கொண்டாடும் பல விழாக்கள் உள்ளன என்றும் அவை ஒன்றாக இருக்கும்  பிணைப்பை வலுப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

அதற்கு முன்பாக, திரு வெங்கையா நாயுடு, ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, கொங்கனி, ஒடியா, பெங்காலி, அசாமி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் சுட்டுரையில் வெளியிட்டார். பிரதமர் அலுவலகம்

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ரக்ஷா பந்தன் என்னும் நன்னாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ரக்ஷா பந்தன் என்னும் புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.  திருவிளையாடல் புராணம் கூறும் ஆவணியில் புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியைப் பரியாக்கியது, கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, கருங்குருவிக்கு உபதேசம், வளையல் விற்ற லீலை ஆகிய திருவிளையாடல் புராணங்களை மக்கள் விழாவாகக் கொண்டாடுவார்கள். சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். மீனாட்சி அம்மன் கோவிலில் மூல உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இதுவே தமிழகத்தில் பழங்கால விழாவாகக் கொண்டாடப்பட்டது ஆவணி மாதம் அவிட்டத்தில் பிராமணர்கள் சிவ பூஜை செய்யும் லிங்காயத்துக்கள் என்ற ஆண்டிப்பண்டாரம், குலாலர்கள், ஆச்சார்ய விஸ்வகர்மாவை பூஜிக்கும் நபர்கள் பூணூல் வைபவத்தை செய்வார்கள். புதிய பூணூல் மாற்றி உபகர்மா மேற்கொள்வார்கள். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பயில்பவர்களும் இந்நாளில் பூனூல் அணிகின்றனர். பௌர்ணமியுடன் கூடிய ஆவணி அவிட்டம் சிவபெருமானுக்கு உகந்த நன்னாள் ஆகும். சிவ பூஜைகளை மேற்கொள்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவதும் பெறற்கரிய வரங்களை பெற்றுக் கொடுக்கும்.ஆவணி மாத பௌர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதமிருந்து. முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணிய மற்றும் சைவ வைணவ நெறியைப் பின்பற்றி வாழும் நபர்கள் ஆற்றங்கரைகளிலோ குளக்கரைகளிலோ தங்களுடைய பழைய பூணூலை அகற்றி புதிய பூணூலை அணிந்துக்கொள்வர். அதுபோலவே ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவம் வளர்க்கும் வடமாநில ரக்ஷா பந்தன் விழா.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவி திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, புடவையின்  பகுதியைக் கிழித்து, அவர் மணிக்கட்டில் கட்டிய நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தன் சகோதரியாக ஏற்றுக்கொண்டு தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக  உறுதியளித்தைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் விசாரணை மன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்ற போது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு சம்பவம் இராஜஸ்தான் மாநில சித்தூர் நாட்டை ராணி கர்ணாவதி ஆட்சி புரிந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற போர் தொடுத்தார். கேள்விப்பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.

கிமு 326 ஆம் ஆண்டில் மாவீரர் அலக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து வடக்குப் பகுதியனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலக்ஸாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்புக் கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலக்ஸாண்டரை விட்டு விட்டார்.

இப்படி ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டம் குறித்து கதையாகச் சொல்ல. தற்போது ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது அழகாக வடிவமைக்கப்பட்ட நூல்களால் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். வடமாநில மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே  கொண்டாடப்படும் இப்பண்டிகையை 2000 ஆண்டுக்குப் பின்னர் இதை இந்து மதப் பண்டிகை என பரவலாக்கிய பலர் இதனை வரலாறு அறியாமல் கொண்டாடிய நிகழ்வு உண்டு. என்பதை விட இதை சமுதாயப் பண்டிகையாக இப்போது தமிழகத்தின் பலரும் கொண்டாடிய நிகழ்வு நடக்கிறது. என்று கூறுவது சாலப் பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்