வங்காள விரிகுடா கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் கடலோரப் பகுதிகளில் நில அதிர்வும் உணரப்பட்டது.

சென்னைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் கடலோரப் பகுதிகளில் நில அதிர்வும் உணரப்பட்டது.ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து 296 கிலோமீட்டர்., தொலைவில் வங்காள விரிகுடாக் கடலில் 10 கிலோமீட்டர்., ஆழத்தில் இன்று பகல் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆகப் பதிவாகியிருந்த நிலையில் இதை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்தது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதில்.

சென்னையில் 12.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. திருவான்மியூர், அடையாறு, கேளம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர் பகுதியில் மக்கள்  நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்பட்டது.

நில அதிர்வு ஏற்பட்டாலும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட வில்லை. வங்காள விரிகுடா கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்