அணைத்து ஜாதி அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

அணைத்து ஜாதி அர்ச்சகராக அரசாணை வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை பெற்ற வாதிகள் தரப்பில் இறுதி ஆணை பெற இயலுமா என்பதே அதன் பின்னர் தான் இப் பிரச்சினையின்  தீர்வு வரும் அணைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும்
அர்ச்சகராக நியமிக்கப்படுவார்களென அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது எனவும். மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக இருக்கிறது எனவும்

தமிழில் அர்ச்சனை செய்வது செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது எனவும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில், 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன. அங்குள்ள நியமனங்களில் ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த 500 கோயில்கள் தவிர 43,500 கோயில்களில் தமிழக அரசின் திட்டப்படி, அறிவிப்புப்படி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம். எனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது. ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்து மனுதாக்கல். செய்திருந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, “சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு முரணாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ஆரம்பக் காலகட்டத்திலேயே ஸ்ரீதரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு, வாதங்களை முன்வைக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்குத் தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்த நிலையில்.அணைத்து ஜாதி யினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அனைத்திந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எண்  ; WP 16287 /2021 & WMP  17241 / 2021.க்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இடைக்காலத் தடை விதித்தார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்