வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு

தமிழகத்தில் இனி வழக்குரைஞராக இல்லாமல் Advocate என்றும் பத்திரிகையாளர்களாக இல்லாமல் மற்றவர்கள் PRESS என்றும் காவல்துறை பணியில் அரசு வாகனங்கள் இல்லாத தனியார் வாகனங்களில் Police என்றும். ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதி மீறுபவர்கள் மீது வழக்குப் பதிய உத்தரவு  போலீஸ், ராணுவம், ரெவின்யூ , ஹியூமன் ரைட்ஸ் மற்றும் யூனியன் சேர்மன், ஊராட்சி மன்றத் தலைவர்   என் எழுதப்பட்ட அரசு வாகனங்கள் அல்லாமல் பணி செய்யும் நபர்கள் சொந்தமாக வாங்கி வீடுகளில் பயன்படுத்தும் தனியார் வாகனங்கள் வக்கீல், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சட்டப் படியல்லாமல் அதற்குரியவர்களைத் தவிர வேறு யார் ஓட்டி வந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் 


பத்திரிக்கைத் துறையில் தூர்தர்ஷன் வானொலி நிலையம் மற்றும் அரசிதழ்கள் தவிர மற்றவை அனைத்தும் பத்திரிகை காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மின்னணு ஊடகம் என  தனியார் நடத்தும் நிறுவனங்களாகும். மத்திய அரசின் முறையான அனுமதி பெற்ற இதழில் பல்லாயிரம் நபர்கள் பணி செய்து வந்தாலும் செய்தி சேகரிக்க மாவட்டம் தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் பகுதி வாரியாக உண்டு. அதுபோலவே காவல்துறையில் அரசு பணியாளர்களாகப் பலரும், வழக்குறைஞர்களில் பலரும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்களது வாகனங்களில் பிரஸ், அட்வகெட் இரண்டும் தனியார் பணி ஆனால் சிலர் அரசில் பணிசெய்தாலும் ஓய்வு பெற்ற பின்னர் எக்ஸ் ஆர்மி, வருவாய் துறை, நீதித்துறை, என தனியார் வாகனங்களில் அரசுக்குச் சொந்தமான பயன்பாடுகளுடைய வாகனங்கள் போல  ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இந்த வாகனங்களை


சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், என அனைவரும் ஓட்டிச் செல்வது வாடிக்கையாகிறது  மேலும் சம்பந்தப்பட்ட பணிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களும் தங்களது வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு வலம் வருகின்றனர். அதில் பல வியாபாரிகள் உண்டு 

காவல்துறை வாகன சோதனையின் போது இந்த வாகனங்களை சோதனை செய்ய பல நேரங்களில் முடியவில்லை. சிலர் தங்களது வாகனத்தை விற்கும்போது, அதை வாங்கிய நபர் அந்த ஸ்டிக்கரை அகற்றாமல் ஓட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சம்பந்தப்பட்ட துறையில் யார் வேலை செய்கிறார்கள் எனத் தெரியாமல் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அனைத்துக் காவல் நிலையங்களுக்கும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி பிரஸ், போலீஸ், வக்கீல் ஸ்டிக்கர்களுடன் நகரில் உலா வரும் வாகனங்களை சோதனையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அந்தத் துறையில் வேலை செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு யாராவது வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறையில் பணி செய்தாலும் அரசு வாகனங்கள் அல்லாமல் தனியார் வாகனங்களில் அவ்வாறு ஒட்டுவது இனி மேல் நடக்காது என நம்பப்படுகிறது.Ex ஆர்மி, பிரஸ், போலீஸ், வழக்கறிஞர், ஹியூமன் ரைட்ஸ், நீதித்துறை, வருவாய் துறை, ஸ்டிக்கர். ஒட்டிய போலிகளின் வாகனங்களுக்கு  கிடுக்கப்பிடி துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் அரசு சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டிய நிலையில் அதிகப்படியான இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களும் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அ, அல்லது, G, என்ற எழுத்து சிவப்பு நிறத்தில் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் உள்ளிட்ட தனியார் சங்கங்களை நீதிமன்றங்கள் தடைசெய்த போதும் அவர்கள் பயன்படுத்துவதால் அப்படி ஸ்டிக்கர் ஒட்டிய தனியார் வாகனங்களைச் சோதனை செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பல தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல G, அல்லது அ, எழுத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுற்றி வருகின்றன. சிலர் ஹியூமன் ரைட்ஸ், போலீஸ், ஆன் கவர்மெண்ட் டியூட்டி, குறிப்பாக,ப்ரஸ், வழக்கறிஞர். டாக்டர், மின்துறை அல்லது டி என் இ பி என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர். ஒரு வீட்டில் ஐந்து வண்டிகள் இருந்தால் அவை அனைத்திலும்  இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் பலர் வாகனச் சோதனையின் போது காவல்துறையினருக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும்  ஒத்துழைப்பதில்லை. எதற்கு வீண் பிரச்சனை என அவர்களும் விட்டுவிடுகின்றனர்.  ஆனால் பல தனியார் பேருந்துகள் இப்போது எக்ஸ்பிரஸ் பர்மிட் அனுமதி இல்லாமல் ஒட்டுவது கூட போக்குவரத்து விதிகளை மீறுவது தான்.அதை பல ஆர்.டி.ஓ அலுவலகங்கள் கண்டுகொள்வவில்லை

ஆனால், இப்போது இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்களின் மூலம் சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து இது போன்ற ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களை நிறுத்தி, முழுமையாக ச் சோதனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 2000 ஆண்டு வரை இப்படி போலியான நபர்கள் வரவில்லை தற்போது அதிகரித்து வருவதற்கு காரணம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மற்றும் பல இடங்களில் தகுதி முன்னுரிமை தான் அதை இவர்கள் சட்டவிரோதமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். சோதனையின் போது முறையான ஆவணங்கள் இன்றி தகுதியுள்ள அடையாளச் சான்று இல்லாமலிருந்து தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதில், இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்கவேண்டும். மேலும், சீரியல் நம்பர், தேதி, நேரம், வாகன பதிவு எண், பயனர் பெயர், முகவரி, செல் நம்பர், அலுவலக முகவரி, பதவி, போன்றவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்திலிருந்து ஒரு நபர் அனுப்பிய, மின் அஞ்சல்-கடிதம்: நம் நாட்டில் மருத்துவர், ஆசிரியர், போலீசார் வழக்குரைஞர், பத்திரிகையாளர் என, அனைத்துத் துறைகளிலும், போலியான நபர்கள் உள்ளனர். அவர்களை ஒழிக்கவே முடியவில்லை.

காரணம் வழக்கறிஞர் படித்ததாக பிற மாநிலங்களில் போலியாக பட்டங்களை வாங்கி, அதன் மூலம் நீதித்துறையில் நடுவர்களாக அமர்ந்த சிலரை, தமிழக பார் கவுன்சில் கண்டறிந்து, அவர்களின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இன்னும் மாட்டாத பல போலிகள் எத்தனையோ உண்டு.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் நீதிபதிகள், 'வாகனங்களில், 'வழக்கறிஞர்' எனும், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு, ஏன் தடை விதிக்கக் கூடாது? என் ' பார் கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்; அது நியாயமான கேள்வி தான். அதேபோல, நீதித் துறை ஊழியர்களில் பெரும்பான்மையோர், தங்களது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில், 'நீதித் துறை' என்றும்; காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பலர், 'போலீஸ்' என்றும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர்.

அரசு ஊழியர்கள், தங்களது வாகனத்தில், சம்பந்தப்பட்ட துறையை குறிப்பிட்டு, ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கின்றனர். இவை, அனைத்திற்கும் ஏன் தடை விதிக்க கூடாது? மேலும், அரசியல் கட்சியினர், 99 சதவீதம் பேர், தங்களது கட்சி தலைவரின் படம், கொடி, சின்னம் ஆகியவற்றை, வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிச் செல்கின்றனர். இந்த செயலுக்கும், தடை விதிக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும், கருப்பு ஆடுகள் எங்கும் நீக்கமறக் கலந்து விட்டது என்பது உண்மையே. ஓராண்டு காலம் ஏதோ ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணி செய்த நபர் தற்போது வேறு பணி செய்யும் நிலையில் அவர் பத்திரிகையாளர் என்கிறார் சமீபத்தில் புதுக்கோட்டையில் மளிகைக் கடை நடத்தி வரும் நபர் ஒரு பத்திரிகை சங்கத்தின் உறுப்பினர் அவர் எழுதிய ஒரு செய்தி கூட யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, வழக்கறிஞர் மட்டும் அல்ல, மோட்டார் வாகனங்கள் சட்டப்படி, யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாள ஸ்டிக்கரையும் வாகனங்களில் ஒட்ட வேண்டாம் என, உத்தரவு பிறப்பிப்பது தான், சரியான தீர்வாக இருக்கும். நீதிபதிகள், முதற்கட்டமாக தங்களது நீதித்துறையில்  பணிபுரிவோர், எந்த ஒரு அடையாள ஸ்டிக்கரையும் ஒட்டக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பொதுவாக, ஸ்டிக்கர் ஒட்டுவது, அவர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டோர் என, நினைக்க வைப்பதற்கு தானே! ஜனநாயக நாட்டில், அப்படி யாரும் இருக்கக் கூடாது. இருக்கவும். முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்