ஹம்பி எனும் விஜயநகரம் பேரரசின் முற்காலத் தலைநகர். குடியரசுத் துணைத் தலைவர் பார்வையிட்ட நிகழ்வு

`ஹம்பி`- இந்தத் தலைமுறை மக்களுக்குப் புரியும்டி கூறுவதானால் அது நிஜத்தில் பாகுபலி நகரம்: வீழ்ந்துபோன மாபெரும் பேரரசின் கதை களம் ஹம்பிதுங்கபத்ரா நதிக்கரையில் ஒரு கடந்த கால வரலாறு மெளனமாக உறங்கிக் கொண்டிருக்கிறதுபேரரசு. முன் காலத்தில் குதிரைகளின் காலடி  குளம்புச் சத்தம், மலைகளெங்கும் எதிரொலித்த  பேரரசு, தற்போது ஆழ்ந்த அமைதியில். விஜயநகரப் பேரரசின் முதன்மைத் தலைநகரம். கோட்டை, சத்தையும், கோயில்களென  உயிர்ப்புடன் இருந்த நகரம் தற்போது அதன் சுவடுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கிறது.பாகுபலி திரைப்படம் பார்த்து  வியந்திருப்போம் அது உண்மை இல்லை.   வரைகலை துணை கொண்டு உருவாக்கப்பட்ட மகிழ்மதி நகரம், அதன் கோட்டைகள், நீளமான மதில்கள், வணிகக் கூடங்கள், கோயில்கள் என அந்த திரைப்படம் நமக்கொரு அலாதியானது நல்ல வரலாற்று அனுபவத்தை வரலாறு படிக்க மறந்து போன அடுத்த தலைமுறை கண்டது? நம் கண் முன்னால் ஒரு மெய்நகர் உலகம் விரிந்ததுதானே? அந்த அனுபவத்தை நிஜத்தில் தருகிறது கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி. பறந்து விரிந்து ஆண்டபின் மதுரை வரை பறந்து விரிந்து வளர்ச்சி கண்ட பின்னர்காலத்தால் வீழ்ச்சியடைந்த விஜயநகரப் பேரரசின் தலைநகராக இருந்த ஹம்பி 26 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்த நகரத்திற்குள் நுழைந்ததுமே நமக்குப் பண்டைய நகரத்திற்குள் நுழைந்துவிட்ட உணர்வு கிடைக்கிறது.
ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க  விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறினால் முழு நிலப்பரப்பின் தரிசனம் சூரியோதயத்தில் அந்தச் சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் சிரமமாக இருக்காது கற்படிகள் உண்டு.
அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித்தால் துங்கபத்ரா நதி  இரு கரைகளைத் தொட்டு எதையோ அடைந்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பயணிக்கும் நதியில் தான் ஹம்பியில் அமைந்துள்ள கோவில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன.

 ஹம்பியில் மட்டும் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள்.

சிவன் மற்றும் கிருஷ்ணர் கோவில் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. நாடெங்கிலுமிருந்து பக்தர்களும், உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளும் தினமும்  வருகிறார்கள்.

 நகரத்திற்குள் நுழையுமிடத்தில் பழங்கால சுங்கசாவடி, அக்கால வணிக நடைமுறைகளை  உணர்த்தும்.

950 மீட்டர் நீளமுடைய சத்தையும், 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் அந்தப்புறக் குளியலறையும், பிரம்மாண்ட அரண்மனையில் எஞ்சிய மிச்சமாகும்.

வரலாற்றின் மீது பெருங்காதல் கொண்டவர்களின் சரியான சுற்றுலாத் தளம் `ஹம்பி'.     கர்நாடக மாநில பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ள உலகப் பாரம்பரியக் களம் கண்ட ஊர் விஜயநகரப் பேரரசின் தலைநகரான போது விஜயநகரமாகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துப் பேரரசு காலத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததான இவ்வூர் முக்கியமான சமயச் சிறப்புப் புகழ்பெற்ற விருபாட்சர் கோயில்  உள்ளது.

தோற்றுவித்தவர் ஹரிஹரர், புக்கராயர் ஆகும்.  ஏற்றம் 467 m (1,532 ft) மக்கள்தொகை 2011 ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 2,777 ஆகும்.

இணையதளம்  www.hampi.in

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி உலகப் பாரம்பரிய பட்டியலில் உள்ளது  ஆசியா-பசிபிக் வரலாறு  பொறிப்பு சிறப்புக்கள் கொண்டது.

விசயநகரப் பேரரசின் படையில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வீரர்கள் இருந்துள்ளனர். பொது ஆண்டு 1500 ல் விசயநகரப் பேரரசில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 500,000 ஆகும். (இது 1440-1540 காலத்திய உலக மக்கட்தொகையின் படி 0.1 சதவீதமாகும்).   குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய தலமான ஹம்பியை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர், நமது வளமான கலாச்சாரம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும் என்று வலியுறுத்தல்

நமது செழுமையான கடந்தகாலம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டிய தேவை குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். இளம் தலைமுறையை ஊக்குவிப்பதற்காக கிருஷ்ணதேவராயர் போன்ற பேரரசர்களின் வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

விஜயநகரப் பேரரசின் முன்னாள் தலைநகரமான கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியை பார்வையிட்ட பின்னர் முகநூலில் பதிவிட்ட குடியரசு துணைத் தலைவர், நமது வளமிக்க மற்றும் துடிப்புமிக்க கடந்த காலத்தை வரலாற்று சிறப்புமிக்க அந்த இடம் நினைவுபடுத்துவதாக கூறினார்.


"நமது வளமான மற்றும் சிறப்பான பாரம்பரியம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில்

வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இடங்களுக்கு கல்வி சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து கல்வி நிலையங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.  

யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய தலமான ஹம்பியின் பிரமாண்டம் மற்றும் அழகு குறித்து புகழாரம் சூட்டிய திரு நாயுடு, வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு தாம் மேற்கொண்ட பயணம் நமது முன்னோர்களின் விசாலமான பார்வை மற்றும் திறமைகள் குறித்த பெருமையை தமக்கு ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

கோட்டைகள், கொத்தளங்கள், மாடங்கள், மாளிகைகள் கோவில்கள் மற்றும் சந்தைகளின் மிச்சங்கள் விஜயநகர பேரரசின் பெருமையை பறைசாற்றுவதாக திரு நாயுடு தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஹம்பியில் உள்ள ஒவ்வொரு நினைவுச் சின்னமும் பிரத்தியேகமாக உள்ளது என்றும், பார்ப்பவர்களை அது பரவசமடைய செய்வதோடு, கம்பீரமான கலாச்சார சிறப்பை பிரதிபலிப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

பெல்லாரி மாவட்டத்தில் கிடைத்த பேரரசர் அசோகரின் சாசனங்களின் படி ஏசு கிருஸ்து பிறப்புக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதி மௌரியப் பேரரசின் பகுதியாக  அறியப்படுகிறது.  அகழ்வாய்வில் பிராமி கல்வெட்டும், இரண்டாம் நூற்றாண்டைச் (பொ-ஊ) சேர்ந்த சுடுமண் முத்திரையும் கிடைத்துள்ளது. ஹம்பியின் குடியேற்றங்கள் பொது ஆண்டு  முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியது.

விசயநகரப் பேரரசின் எழுச்சிக்கு சிறிதுகாலம் முன்னர் ஹம்பியிலிருந்து கிழக்கே 19 கிமீ தொலைவிலுள்ள சிறு நகரமான கம்ப்பிளியை ஆண்டவர்களின் கைவசம் ஹம்பி இருந்திருக்கக்கூடும்.

விசயநகரப் பேரரசு தக்காண முகலாய சுல்தான்களின் படையெடுப்புக்குள்ளான போது அப் பேரரசின் தலநகரத்தின் மிகச்சிறந்த பகுதியாக ஹம்பி விளங்கியது.வற்றாத துங்கபத்திரை ஆற்றால் ஒரு புறமும், ஏனைய மூன்றுபுறங்களிலும் இயற்கை அரணாக அமைந்த மலைகளாலும் சூழப்பட்ட இது தலைநகராக அமைந்ததற்கு முக்கியக் காரணமாகும். 1420 ஆம் ஆண்டு இந்நகரைப் பார்க்க வந்த நிக்கோலா கோண்டி என்ற இத்தாலியப் பயணி இந்நகரம் 60 மைல் சுற்றளவு கொண்டது என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரியும் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளருமான கர்னல் காலின் மெக்கன்சீயால் 1800 ஆம் ஆண்டு ஹம்பியின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோவில்களிருந்தன. இங்குள்ள பம்பபதி கோவில் (விருபாட்சர் கோவில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் ஆகியவற்றின் அழிபாடுகள் விசயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.இந்தியத் தொல்லியல் துறையினரால் தொடர்ந்து அகழ்வாய்வு நடந்து வருகிறது.

மால்யவந்தா மலையின் வடக்கு சரிவுக்கும் தலரிகட்டா வாயிலுக்குமிடையே இசுலாமியக் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. அரசவையின் உயர் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் வசித்த இடமாக இசுலாமியக் குடியிருப்புப்பகுதி இருக்கக்கூடுமென தொல்லியலாய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisment-.  -Advertisment

இராமாயணத்தில்  குரங்குகளின் அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பியிலுள்ள பல புண்ணிய இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. அருகிலுள்ள நிம்பபுரத்தில் வாலியின் எச்சங்கள் காணப்படுகின்றன.

ஹம்பியில் உள்ள ’அஞ்சனாத்ரி குன்று’ அனுமன் பிறந்த மலையாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த மலையில் 1060 படிகள் ஏறிச்சென்றால் அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனா தேவிக்கும் கோவில்களுள்ளன. இங்கு வழிபாடும் நடத்தப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்