பத்து லட்சம் வழிப்பறி செய்த பெண் காவல்துறை ஆய்வாளர் வசந்தி வழக்கில் மூன்று நபர்கள் கைது

ரூபாய் பத்து லட்சம் வழிப்பறி செய்த பெண் காவல்துறை ஆய்வாளர் வசந்தி வழக்கில் மூன்று நபர்கள் கைதுமதுரையில் பேக் தைத்து விற்பனை செய்யும் வியாபாரியிடம் ரூபாய் பத்து லட்சம் பெண் காவல்துறை ஆய்வாளர் வசந்தி பறித்த வழக்கில் தற்போது மூன்று நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அர்ஷத் (வயது 32). 

பேக் கம்பெனிக்கு தேவையான பொருட்கள் வாங்க ஜூலை மாதம்  5 ஆம் தேதி ரூபாய். பத்து லட்சத்துடன் மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு பணம் இரட்டிப்பாக்கித் தரும் நபர்களாக காட்டிக்கொண்ட சில போலியான நிதி நிறுவனம் நடத்தித் தருவதாக ஏமாற்றி வாழும் நபர்கள் அறிமுகம் பெற்றவர் பணத்தாசை காரணமாக சந்திக்க வந்தபோது அதை முன் கூட்டியே அறிந்த காவல்துறை ஆய்வாளர் வசந்தி மற்றும் மோசடி கும்பல் சேர்ந்த தேனி மாவட்டம்  பழனி செட்டிபட்டி பால்பாண்டி (வயது42), மதுரை மாவட்டம்  சிலைமான் உக்கிரபாண்டி (வயது 62), விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சீமைச்சாமி (வயது 51), பாண்டியராஜன் உள்ளிட்ட நபர்கள் கூடி ரூபாய்.10 லட்சத்தை வியாபாரி யிடம் பறித்ததாக ஜூலை மாதம்  27 ஆம் தேதியில் புகார் கூறப்பட்டது.

மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து. காவல்துறை ஆய்வாளர்

வசந்தி  பணியிடை நீக்கம் செய்யப் பட்டார் பின்னர் முன்ஜாமின் மனு  உயர்நீதிமன்றத்தில் செய்த நிலையில் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்பாஸ்கரன் உத்தரவின் படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் ஆய்வாளர் சுதந்திராதேவி, சார்பு ஆய்வாளர்கள் ஆனந்த், முத்துபாண்டி, ஆறுமுகம், பிரிட்டோ, நாகமணி உள்ளிட்டோர் கொண்ட காவல்துறையினர் குற்றமிளைத்த வழக்கு பதிவில் கண்ட பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமியை உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்து ரூபாய்.2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

தலைமறைவாக உள்ள காவல்துறை ஆய்வாளர் வசந்தி, மற்றும்பாண்டியராஜனை ஆகியோர் தேடி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்