கோவிஷீல்டு மற்றும் கோவாக்‌சின் தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு, கோ-வின் இணையதளம் மூலம் தடுப்பூசி சான்றிதழ்

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்‌சின் தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு, கோ-வின் இணையதளம் மூலம் தடுப்பூசி சான்றிதழ்கோவிஷீல்டு மற்றும் கோவாக்‌சின் தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு, கோ-வின் இணையதளம் மூலம் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்‌சின் தடுப்பூசி பரிசோதனைகளில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான டிஜிட்டல் சான்றிதழ்களை கோ-வின் இணையதளம் மூலம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். 

அதன்படி தடுப்பூசி பரிசோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.  தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற 11,349 பேரின் விவரங்களை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு,  கோ-வின் இணையதளம் மூலம் தற்போது டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் தங்களின் சான்றிதழ்களை, கோ-வின் இணையதளம், ஆரோக்கிய சேது செயலி, டிஜிலாக்கர் அல்லது உமாங் செயலி ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்