பாரம்பரிய சைவ மடத்தை கைப்பற்ற நினைக்கும் தலைமறைவான நித்யானந்தா

தேவாரம் பாடிய மூவரில் சோழ நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், காழி என்ற பன்னிரண்டு பெயருடைய சீர்காழி சிவபாத இருதயாருக்கும், பகவதியம்மாளுக்கும் மகனாக பொது ஆண்டு 637 ல் பிறந்து அம்பிகையின் அருளால் ஞானப்பால் அருந்திய சம்பந்தர்  ஞானசம்பந்தரானார்.                ". தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்      

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்        

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த       

பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.”                   தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், திருமறைக்காடாகிய வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா இன்றும் நடக்கிறது. ரிக், யஜூர்,சாம,அதர்வண  வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், சோழ மன்னர்கள் காலத்தில் சைவ, வைணவப் பிரிவு சமனத்தின் வளர்ச்சி காரணமாக பின்னர், கோவில் பிரதானக் கதவுகளை மூடிச் சென்றதாகவும் செவிவழித் தகவல் அதன் பின்னர் இலங்கையில் வென்று வெற்றிக் கொடி நாட்டிய இராஜேந்திர சோழன் அங்கு வேதாரண்யம் ஆலயத்தின் தலைமை தேவஸ்தானம் அமைத்த வரலாறு கொண்ட ஆலயம். 

பின்னாளில், இந்தக் கோயிலுக்கு வந்த சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும்  ஸ்தல புராணத்தில் கூறப்படுகிறது. அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும்


பாடியதாக ஐதீகம். இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின் போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைபெற்று வருகிறது. அப்பேர்ப்பட்ட சைவ நெறி கொண்ட ஞானசம்பந்தர் அமைத்த மடத்தின் மதுரை வரலாற்றில் அதன் கதவுகளை பூட்டி சீல் வைக்கக் காரணமாக இருந்தவர் போலி கைலாசா அதிபர் நித்யானந்தா என்பதை சைவர்கள் மறக்கவில்லை என்பதற்கு தற்போது புதிய ஆதீனம் வந்த மரபுவழியே  சாட்சியாகும். அதை மீறி தற்போது போலி கைலாசா அதிபர் நித்யானந்தா தகவலில் மதுரை ஆதீனத்தின் 293 வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டதாக பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டது தான்.


மதுரை ஆதீனத்தின் 293 வது பீடாதிபதியாக பதவியேற்று விட்டதாகவும், ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் முகநூலில் இல்லாத ஒரு போலி கைலாசா நாட்டை இருப்பதாகக் கூறி ஏமாற்றி ஈக்வைடர் தீவில்  தலைமறைவானதாக இருக்கும் மக்களை ஏமாற்றி நம்பவைத்த  நித்தியானந்தா தற்போது பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்

மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ஆம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை முனிச்சாலை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293 வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு ஆச்சார்ய மடாதிபதி பட்டாபிஷேகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை ஆதினத்தின் 293 வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா முகநூலில் அறிவித்துள்ளதில் உள் நோக்கம் உண்டு.293 வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுக் கொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் அப் பக்கத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். தனது பெயரை 293 வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தது கடும் சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றதும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்