ஓணம் திருநாள் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி.

குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவரின் ஓணம் வாழ்த்துச் செய்தி.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஓணம் நன்னாளில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் கேரள சகோதர சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறுவடையை கொண்டாடும் இந்த பண்டிகை, விவசாயியின் கடின உழைப்பை எடுத்துரைப்பதோடு, இயற்கை அன்னைக்கும் நன்றி செலுத்துகிறது. நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றை சமுதாயத்தில் இப்பண்டிகை விதைக்கிறது.

இந்த நன்னாளில், நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்தை நோக்கி ஒன்றிணைந்து முன்னேறி செல்ல நாமனைவரும் உறுதியேற்போம்,” என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.        குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘ ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பல பகுதிகளில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை ஓணம் குறிக்கிறது மற்றும் இயற்கையின் உயிர்ப்பு மற்றும் மிகுதியை கொண்டாடும் நிகழ்வாக உள்ளது. கேரளாவின் பழங்கால பண்டிகையான ஓணம், புகழ்பெற்ற மகாபலி மன்னரின் நினைவை கவுரவிக்கிறது. மலர்களின் வண்ணமயமான இந்த திருவிழா, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி பாரம்பரிய விளையாட்டுகள், இசை மற்றும் நடனத்தில் ஒன்றாக இணைந்து ‘ஓணசத்யா’ என்ற பிரம்மாண்ட விருந்தில் பங்கேற்கும் நிகழ்வாக உள்ளது.

இந்த பண்டிகையை கொவிட் மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடும்படி நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விழா, நமது நாட்டில் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்.’’மேலும் தமிழகத்தின் முதல்வர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.


அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளம் ஓணம் திருநாள்!

மக்களின் அன்பைப் பெற்ற மாவலி மன்னரை அத்தப்பூ கோலமிட்டு வரவேற்கும் மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.               பிரதமர் அலுவலகம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“நேர்மறை, ஆற்றல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய சிறப்பு பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரது  ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்