தமிழ்நாடு அரசின் முதல் பொது நிதிநிலை காகிதப் பயன்பாடுகள் இல்லாத அறிக்கையாக இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது

தமிழ்நாடு அரசின் முதல் பொது நிதிநிலை காகிதப் பயன்பாடுகள் இல்லாத அறிக்கையாக இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாடு அரசு  நிதிநிலை அறிக்கையில்


வெளிநாட்டில் கல்வி கற்க கல்வி உதவித்தொகைச் திட்டம் திருத்தி அமைக்கப்படும்.

அங்கான்வாடி தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.

சுற்றுலா துறைக்கு 187.59கோடி ஒதுக்கீடு.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு,  சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.

போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் ரூ.130 கோடி நிதி ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டு 100 திருக்கோவில்களில், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்க 100 கோடி ஒதுக்கீடு. திருக்கோவில்களை நிர்வகிக்க பரம்பரை அல்லாத அரங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரிக்க இந்திய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

டிசம்பர் மாதத்திற்குள் 29 துறைகள் மூலம் வழங்கப்படும். 600க்கும் மேற்பட்ட சேவைகள் மின்னணு மூலம் வழங்கப்படும்.

கனிமங்கள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க புதிய கொள்கை உருவாக்கம்; புதிய கனிம வள கொள்கை மூலம் அரசின் வருவாய்  அதிகரிக்கப்படும்.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.

மாநிலத்தின் 2 ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்.

திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் தொழில்துறை அலகுகளுக்காக 60 எம்.எல்.டி கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும்.

தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.

மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

25 கலைக் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு ஆளில்லா விமான கழகமானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.

மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அது 51. சதமாக உள்ளது. 17 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது - நிதியமைச்சர்.

வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய அறிக்கை தயார் செய்யப்படும்.

1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.

2,200 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்.

ரூ.17,899.17 கோடி நெடுஞ்சாலைகள் துறைக்கு ஒதுக்கீடு. புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு. 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.

புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்.

உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்.

கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

திருச்சிராப்பள்ளியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்

2021 - 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களைத் தரம் உயர்த்த ரூ.111.24 கொடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டிலுள்ள மகளிர் சுயஉதவிகீ குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ரூ.87 கோடி செலவில் திட்டம்.

உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு - நிதியமைச்சர்

சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மேம்படுத்தப்படும்

கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்.

8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

மத்திய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

ரூ.2000 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்.

குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு.

உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும. இதற்காக ரூ.433 கோடி ஒதுக்கீடு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ரூ.150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607 கோடி ஒதுக்கீடு.

பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.

30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைக்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.

நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு, அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்

தேவையுள்ள இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்.

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல அரசு உறுதியேற்றுள்ளது, இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி வரை நிதி ஒதுக்கீடு.

போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.

காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.

1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.

தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும். உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் 

வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.

கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கலைஞர் 'செம்மொழி தமிழ் விருது' ரூ.10 லட்சம் பரிசுடன் இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்படும்.

அனைத்துக் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்