ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை நுகர்வோர் வாங்குவதற்கான வாய்ப்பு

எரிசக்தி அமைச்சகம்  ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை நுகர்வோர் வாங்குவதற்கான வாய்ப்பு


மாநிலங்களவையில் கேள்விகளுக்கு  எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மின்சார விநியோக நிறுவனங்கள் ஏகபோக உரிமையுடன் செயல்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான விருப்பத்தேர்வு நுகர்வோருக்குத் தரவேண்டியத் தேவை இருக்கிறது என்று மத்திய பட்ஜெட் 2021-22-ல் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாநில அரசுகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2021 மார்ச் 3 அன்று ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இந்த சீர்திருத்தம் விவாதிக்கப்பட்ட நிலையில், நாடளுமன்ற உறுப்பினர்கள் இதை வரவேற்றனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான விருப்பத்தேர்வை நுகர்வோருக்கு வழங்க மின்சாரச் சட்டம் 2003-இல் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

மின்சாரத் தேவை அதிகமுள்ள நிறுவனங்களில் மின்சாரச் சிக்கனத்தை அதிகரிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட மின்சார சிக்கனத்திற்கான தேசிய இயக்கத்தின் கீழ் நான்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

செயல்பாடு, சாதனை மற்றும் வர்த்தகம் மேற்கொள் (பேட்), மின்சாரச் சிக்கனத்திற்கான சந்தை மாற்றம், மின்சாரச் சிக்கன நிதி மற்றும் மின்சார சிக்கனப் பொருளாதார வளர்ச்சிக்கான செயல்முறை ஆகியவையே அந்த நான்கு நடவடிக்கைகள் ஆகும். இதுவரை 29 மில்லியன் விளக்குகள் சிஎஃப்எல் விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டு, ஒரு வருடத்திற்கு 3.598 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

அனல் மின் நிலையங்களில் மாசைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனல் மின் நிலையங்களில் நிலக்கரிப் பயன்பாடு குறித்த விதிகளை 2021 மே 21 அன்று அரசிதழில் இந்திய அரசு வெளியிட்டது.

உமிழ்வு விதிகளுக்கான தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குதல், சாம்பல் குட்டைகளின் மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றுக்கான நிபந்தனைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

தேசிய மின்சாரக் கொள்கை, 2005, தேசிய கட்டணக் கொள்கை 2016, தேசிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் கொள்கை 2007 மற்றும் நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தலில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம் 2013 உள்ளிட்டவற்றின் மூலம் நாட்டில் புனல் மின்சாரத்திற்கான பல்வேறு கொள்கை முன்னெடுப்புகளை அரசு எடுத்துள்ளது.

2019 மார்ச் 8 என்று புனல் மின்சாரத் துறையை ஊக்கப்படுத்துவதற்கான அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. மிகப்பரிய நீர் மின்சாரத் (> 25 மெகாவாட்) திட்டங்களைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக அறிவித்தல், நீர் மின்சார விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள், நீர் மின்சார திட்டங்களுக்கு நிதி ஆதரவு, சாலைகள் மற்றும் பாலங்களுக்கானத் தேவைப்படும் உள்கட்டமைப்புகளுக்கான நிதி ஆதரவு இவற்றில் அடங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்