அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தின் கமாண்டர் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துடன் சந்திப்பு

பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துடன், அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தின் கமாண்டர் சந்திப்பு


அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தின் கமாண்டர் அட்மிரல் ஜான் சி அக்கிலினோ, அரசு முறைப் பயணமாக நேற்று புதுதில்லி வந்தார். இந்திய பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்-ஐ, அவர் இன்று சந்தித்து பேசினார்.


இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோரையும்  அட்மிரல் அக்கிலினோ சந்தித்து பேசினார்.


புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில், அவர் மலர் வளையம் வைத்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்