பாஜகவில் மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம்

பாஜகவில் மூத்த தலைவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம்.


சிக்கிம் மாநில ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் சமீபத்தில் மணிப்பூர் மாநில ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு  வகித்தார். தற்போது, மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 76 வயதான இல.கணேசனை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் மணிப்பூர் ஆளுநராக அறிவித்திருக்கிறார். முன்னதாக, தமிழக 


பாஜக உள்ளிட்ட பல  அமைப்புகளை வழிநடத்தும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தினை தமிழகத்தில் காலூன்ற வைத்தவர்களில் இல.கணேசனின் பங்கு மிக முக்கியமானது. தஞ்சாவூர் பத்திரிகை விற்பனை முகவரின் மகனான இல.கணேசன் சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஸில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேரப் பணியாளரானார் பின்னர் அந்தத் தலைமை வழிகாட்டலில் அரசியல் பிரிவான பாஜக வில் இறங்கினார். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளராகவும், பின்னர் கன்னியாகுமரி முதல் திருச்சிராப்பள்ளி வரையுள்ள மாவட்டங்களின் பொறுப்பாளராகவும், தமிழ்நாடு மாநில இணை அமைப்பாளரென இல.கணேசன்  தமிழகத்தில் பாஜகவின் முதல் முகமாக மாறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தனது பயணத்தைத் தொடங்கிய இல.கணேசன் 1991 ஆம் ஆண்டில் பாஜக-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலத் தலைவருக்கு நிகரான மாநில அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.


1970 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில், அப்போது ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் முன்னிலையில், அரசுப் பணியை துறந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேரப் பிரசாரகராக இணைந்ததைத் தொடர்ந்து, தான் திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காகவும், பாஜக-விற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பொது வாழ்வில் இறங்கினார். குஜராத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளராகப் பதவிவகித்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழ்நாட்டின் மாவட்டப் பொறுப்பாளராக இல.கணேசன் பதவி வகித்தார். 30 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் இல.கணேசன் அக்கட்சியின் தேசியத் தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும், தமிழக தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாகத் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.  பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.

சித்தாந்த ரீதியாகவும், கட்சிக் கொள்கைகளின் படியும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இல.கணேசன் முரண்பட்டாலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு முன்னால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் போல அன்புடன் பழகுவர். அரசியல்வாதியாக தேசியளவில் அறியப்படும் இல.கணேசன் பத்திரிகையாளரும்கூட. எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் இவரிடம் பேசிக்கொண்டிருந்தால் வரலாறு கதைபோல கூறும் வல்லமை அறியலாம். பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பும்  நடத்தி வருகிறார்.

இவரது சமூக அரசியல் பயணத்தில் ஆளுநர் பதவி மிகப் பெரிய 'மைல்கல்லாக' அனைவராலும் பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநிலத்தின் 17 வது ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கும்  The Honorable President of India has been pleased to appoint Shri La.Ganesan(76,17/2/1945),to be the Governor of Manipur with effect from the date he assumes charge.                நிலையில், அவரின் பதவியேற்பு குறித்ததான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். நம்மை ஆரம்பத்தில் 1991 ல் சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான சேவாபாரதியில் பணியாற்றும் படி அழைத்தார் அதை நிறைவேற்ற அப்போது சுந்தர லட்சுமணன் நமது இல்லம் வந்த நிகழ்வு உண்டு. நல்ல பண்பாளர் இப்போது சரியான முறையில் மேதகு  ஆளுநர் மனிப்பூர் அவர்களுக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்