முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் . பேரனென்று பொய் கூறி பல மோசடிகள் செய்த சுகேஷ் சந்திரசேகர் கைது

 சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சென்னை கானத்தூரில் அமைந்துள்ள ஒரு சொகுசு கடற்கரை முன் அமைந்த பங்களாவில், ரூபாய் .82.5 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், 16 சொகுசு கார்கள் மற்றும் இதர உயர்தர பொருட்களை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.  



                                 

          முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் . பேரனென்று பொய் கூறி பல மோசடிகள் செய்த சுகேஷ் சந்திரசேகர் கைது. இவரது சென்னை கானாத்தூர் வீட்டில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள், தொடர்ந்து 5 நாட்களாக  சோதனை நடத்தி, 20 சொகுசு கார்கள், லேப்டாப்களைப் பறிமுதல் செய்துள்ளனர்..




இவ்வளவு மோசடிகள் செய்தவரான இவர் யார் -

2017 ஆம் ஆண்டில் வி.கே.சசிகலா நடராஜன் சிறை சென்ற நிலையில், டிடிவி தினகரனுக்கு  நெருக்கடி ஏற்பட்டது.. இரட்டை இலையை கைப்பற்றினால் தான், தன்னை நிரூபிக்க முடியுமென கட்டாயத்துக்குள்ளானார்.

தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கைப் பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தருவதாக ஒரு புரோக்கர் சொன்னதாகவும், அவரை நம்பி டிடிவி தினகரன் ரூபாய்.60 கோடி பேரம் பேசியதாக அப்போது செய்திகள் வந்ததே அந்த புரோக்கராகக் கூறப்பட்ட நபர் தான்  சுகேஷ் சந்திரசேகர். என்ற சுதீஷ் சந்திரா.

டெல்லி காவற்துறையினர் நட்சத்திர ஹோட்டலிலிருந்த சுகேஷிடமிருந்து ரூபாய்.1.30 கோடி பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். அந்தப் பணம் தினகரன் லஞ்சமாக தந்த பணம் என்பதும் தெரியவரவே சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சேகர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கில் பணத்தையும், சொத்துக்களின் ஆவணங்களையும் அள்ளினார்கள்.


தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தினகரனோ, சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தனக்கு தெரியாது, அவரிடம் நான் பேசியது கூட இல்லை என்று திட்டவட்டமாக மறுத்ததுடன் இது தொடர்பான விசாரணை டெல்லியில் நடந்தபோதெல்லாம் ஆஜரானார். கடைசியில், தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின் தினகரன் ஜாமீனிலும் விடுதலையானார். இந்தச் சம்பவம் நடக்கும் சமயத்தில் தான், பாஜக தன்னுடைய விஸ்வரூப வளர்ச்சியை எடுத்தாக நினைத்துக் கொண்டிருந்தது. தினகரன் விஷயத்தில் கறாராக நடந்து கொண்டு சிறையில் தள்ளியதையும் தன்னுடைய வெற்றியாகவும், ஊழலுக்கு எதிரான கட்சியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணையிலுள்ளது. 

அடுத்து சுகேஷ் சந்திரா அடிப்படையிலேயே ஒரு கிரிமினலாவார். பல மோசடி வழக்குகள் இன்னும் நிலுவையிலிருக்கின்றன. வங்கிகளில் கடன் பெற்று மோசடி உள்ளிட்ட ரூபாய் 200 கோடிக்கான மோசடி வழக்குகளும் நிலுவையிலுள்ளன.அதில் சுகேஷுடன் அடிபட்ட பெயர்தான் லீனா மரியா பால். இவர் கேரளத்து நடிகை. தேசிய விருது பெற்ற மெட்ராஸ் கபே படத்தின் கதாநாயகியாவார்

இவரது காதலன்தான் சந்திரசேகர். அதாவது இந்த சுகேஷ் சந்திரா. கோரேகாவ் மேற்கு லிங்க்சாலையில் உள்ள இம்பேரியல் ஹைட்ஸ் என்ற அபார்ட்மென்ட்டில் 2013 ஆம் ஆண்டில் காதலனுடன் வசித்து வந்தார். இருவரும் சேர்ந்து அந்தேரி மேற்கு, சாலிமார் மோர்யா மார்க் கட்டிடத்தில் ‘லயன் ஓக் இண்டியா' எனும் நிதி நிறுவனம் நடத்தி 20 க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவித்து, அதன் கீழ் மாதந்தோறும் 20 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பித் தருவதாக பண வசூலில் ஈடுபட்டு வந்தது தவிர குலுக்கல் முறையில் கார் பரிசாகக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.. இவர்களை நம்பி, மும்பையைச் சேர்ந்த பலர் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து ரூபாய்.5 ஆயிரம் முதல் ரூபாய்.5 லட்சம் வரை வசூல் செய்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், கடைசிவரை அந்த முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை.

இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதலீட்டாளர்களில் பலர் மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையில் புகார் கொடுத்ததன் பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நிறுவனம் ரூ.10 கோடி வரையிலும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து காவல்துறையினர் நடிகை லீனா மரியா பால், சேகர் சந்திரசேகர் இருவரையும் கைது செய்து அவர்களின் அலுவலகத்தில் நடத்திய சோதனையின் போது, ரூபாய்.1 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள 117 விலை உயர்ந்த வெளிநாட்டுக் கைக்கடிகாரங்கள், ரூபாய்.37 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 12 செல்போன்கள், ரூபாய்.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் போன்றவைகள் சிக்கின. ரூபாய்.5 கோடி மதிப்புள்ள 9 விலை உயர்ந்த வெளிநாட்டுக் கார்களையும் கைப்பற்றினர்.. இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய்.6 கோடியே 50 லட்சமாகும்.

இந்தக் குற்றச் செயல்கள் தவிர, 2 வெளிநாட்டுத் துப்பாக்கிகள், பண பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரைவோலைகள், காசோலைகளையும் கைப்பற்றினார்கள்... இதில் ஹைலைட் என்னவென்றால் சுகேஷ் சந்திரா திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோதும், ஜெயிலுக்குள்ளிருந்தே பணம் பறிப்பு, ஆட்கடத்தலென பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார், இது காவல்துறைக்கு சவாலான செயலாகும். கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லி ஏமாற்றியுள்ளார்..

தமிழகம் மட்டுமில்லை.. மும்பையிலும் ஏராளமான தொழிலதிபர்களை குறி வைத்து மோசடியில் இறங்கி வந்துள்ளார் சுகேஷ்.. அப்படி மோசடி செய்து சேர்த்த சொத்துக்கள் மட்டுமே கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் இருக்குமாம்.. அவைகளை தன்னுடைய குடும்பத்தினர் பெயரில் பல்வேறு மாநிலங்களில் முதலீடும் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.. இப்போது அவரது வீட்டில் மேலும் பல டாக்குமென்ட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சுகேஷ் மீதான பிடி இறுகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், சென்னையில் மின் வேலியுடன் அரண்மனை போல கட்டிய பங்களாவில், டில்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சொகுசு கார்கள், 82.50 லட்சம் ரூபாய் பணம், 2 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அ.தி.மு.க.,வில், பொதுச்செயலாளர் ஜெ ஜெயலலிதா காலமான பின், வி.கே.சசிகலாநடராஜன் எதிர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் செயல்பட. 2017 ஆம் ஆண்டில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கு இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை காரணமாக தேர்தல் கமிஷன் முடக்கியதை மீட்க,  தினகரன், முயற்சி செய்வதாகவும்.அதற்கேற்ப, டில்லி நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த, பெங்களூர் மோசடி நபரான சுகேஷ் சந்திரசேகர், வயது 32, டில்லி குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் சிக்கியவரிடம் 1.30 கோடி ரூபாய் ரொக்கமும், பி.எம்.டபுள்யூ., மற்றும், 'மெர்சிடஸ் பென்ஸ்' கார்களைப் பறிமுதல் செய்தனர்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தினகரன் சார்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக சுகேஷ் சந்திரசேகரிடம் 1.30 கோடி ரூபாய் தரப்பட்டிருப்பதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக,  வழக்கு பதிவு செய்து, சுகேஷ் சந்திரசேகர், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரைக் கைது செய்து, டில்லி திகார் சிறையிலடைத்தனர். இந்த வழக்கில், தினகரன் ஜாமினில் உள்ளார் இந்நிலையில், சிறையிலிருந்தபடி, சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது இப்போது தெரிய வந்துள்ளது. இவர் மீது, டில்லி அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோதப் பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிந்தனர். வழக்கு தொடர்பாக, சென்னை, கானத்துார் ரெட்டி குப்பம் பகுதியில், கடற்கரைக்கு அருகே, நீச்சல் குளம், மினி தியேட்டர் என, சகல வசதிகளுடன், அரண்மனை போல சுகேஷ் சந்திரசேகர் கட்டியுள்ள பங்களாவில் ஏழு நாட்களாக ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.

பங்களாவின் மதில் சுவர் மட்டுமே 20 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல், மின் வேலி அமைக்கப்பட்டு நுழைவு வாயிலில் பிரபலங்கள் பயன்படுத்தும், 'கேரவன்' சொகுசு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் மற்றும் பங்களாவின் உள்ளே, 'போர்ஸ், லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்ரோவர், பி.எம்.டபுள்யூ, பார்சுனர்' என, சொகுசுக் கார்களுமிருந்தன. இந்த கார்களைப் பறிமுதல் செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், பல லட்சம பணம்,  கிலோ கணக்கில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி பங்களாவிற்கும், 'சீல்' வைத்தனர்.

பெங்களூரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே, காவல்துறை துணை கமிஷனர் மகன் எனக்கூறி, தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சிக்கினார்.அதன்பின், மறைந்த தி.மு.க., தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் பேரன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் மற்றும் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல நடித்து, தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 1000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். இவரின் காதலி மெட்ராஸ் கபே  திரைப்படத்தில் நடித்த, லீனா மரியபால் என்பவரும் 2013 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.                                      ஆதாரங்கள்நிலை : சுகாஷ் சந்திரசேகர் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக நவம்பர் 2020 இல் திகார் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார் மற்றும் அவரது பரோல் மர்மமான சூழ்நிலையில் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

சிபிஐ -யில் உள்ள முக்கிய ஆதாரங்களின்படி, அவர் பரோலில், சென்னை திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரனின் மனைவி ஈசிஆர் பங்களாவில் சென்னையில் தங்கியிருந்தார் - இந்திரா ராஜேந்திரன் சுகாஷை அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

இந்திரா ராஜேந்திரன் மலேசிய பிரதம மந்திரி செல்வம் ராமராஜின் சிறப்பு ஆலோசகருடன் நட்பு கொண்டார், அவர் தனது மருத்துவ, பல் மருத்துவ நிறுவனங்களுக்காக நிதி திரட்ட மலேசியா சென்றார்.

அவருடைய நிறுவனங்களின் விவரங்கள்: இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், பிரியதர்ஷினி பல் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், இந்திரா நர்சிங் கல்லூரி, இந்திரா நர்சிங் பள்ளி, இந்திரா மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திரா கல்வியியல் கல்லூரி, இந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும்.

பிஜேபிக்கு நிதி சேகரிக்கும் பணி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் சுகேஷ் @ சாகேத், செல்வம் ராமராஜை வி.கே.சசிகலா உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களிடமிருந்து நிதி வசூலிக்கும்படி கேட்டார். அதன் தொடர்ச்சியாக, 

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவை 7926 கோடிக்கு மோசடி செய்ததற்காக சிபிஐ வலையில் இருக்கும் டிடிபி எம்பி ராயப்பட்டி சாம்பசிவ ராவை அவர்கள் தொடர்பு கொண்டனர். சந்தேகத்திற்குரிய சாம்பசிவ ராவ் பரிவர்த்தனை குறித்து சிபிஐக்கு அறிவித்தார் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தப் பரிவர்த்தனை இந்திரா ராஜேந்திரன், மூலமாக மட்டுமே நடந்ததாக தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...