குடும்ப அட்டைகளில் வழங்கப்படும்.பொருட்கள் வாங்குவதில் சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்க அங்கீகார படிவம் வழங்கும் முறை சுலபமாக்கியது மாநில அரசு,

இந்தியாவில் 1964 மற்றும் 1965 ஆம் ஆண்டில் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி, 1965-66- ஆம் ஆண்டில் 72.3 மில்லியன் டன்களாகக் குறைந்ததால் இந்தியா கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கிய போது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள்


அறிமுகமாகி 1966 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியில் இத் திட்டம் வந்தது. என்றாலும், அப்போதய காலம் ஆம் எல்லா குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை. 1969 ஆம் ஆண்டில் கலைஞர் மு. கருணாநிதி முதல்வரான பிறகு, 1972 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பொது விநியோக கழகம் (சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்) தொடங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது                ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க சிரமப்படுவோர், வேறொரு நபர் வாயிலாக வாங்குவதற்கான அங்கீகார படிவத்தை, உணவு வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கடைக்கு செல்ல முடியாத நிலையில், தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இதற்கு, கார்டுதாரர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை ஊழியர்கள் பணத்திற்கு விற்பதாகவும், வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒப்புதல் தர தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுகின்றன.                              -       Advertisment-


               

                               -Advertisment

உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள், அதற்கான அங்கீகார சான்று ஒப்புதல் படிவத்தை, 'www.tnpds.gov.in' என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்தை உரிய முறையில் சரிபார்த்து, விரைந்து ஒப்புதல் தர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்