நான்காண்டுகள் அரசியலில் பிழை செய்த நிலையால் தற்போது விஸ்வரூபமெடுக்கும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சிக்கிய முன்னால் சிஎம்

தூய்மை வாதம், இலஞ்சமற்ற அரசியல், ஊழலற்ற அரசியல் என்று முன்னெடுத்த 1995 காலத்தில் த.மா.காங் துவங்கிய காலம்சென்ற  ஜி.கருப்பையாமூப்பனார்,  மதிமுக துவங்கிய  அப்போது வை. கோபால்சாமி யாகிய தற்போது வைகோ, தேமுதிக துவங்கிய நடிகர் விசயகாந்த். பாமக துவங்கிய மருத்துவர் ச.இராமதாசு, DPI துவங்கிய. திருமாவளவன், கம்யூனிஸ்ட் இடது சாரிகள், அதிகாரிகளான. சகாயமும்  நடிகரான  ரஜினிகாந்த், மநிமை துவங்கிய நடிகர் கமலஹாசன் தோற்று வாயிலேயே சிலகாலம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் இடையிலேயே மரணிக்கக் காரணமென்ன?

தற்போது; பாஜாகவின் பாணியில் எதிரிகளை திமுக வெல்லத் திட்டமிடுகிறது. என்பது உண்மையாக லாம்.


எதிர்த்து அரசியல் செய்வதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கோ பெரியகுளம் ஓ.பன்னீர் செல்வத்திற்கோ தகுதியோ திறமையோ கிடையாது. 

அதிமுக கூடாரம் 1996-2011 வரை பல முறை காலியானாலும் மீண்டும் மீண்டும் எழ  கட்டமைத்த தகுதி உடைய, துணிச்சல் உடைய, மக்கள் ஆதரவைப் பெறக் கூடிய தலைமை இல்லாமல் அதிமுக அப்படியே திமுக ஆகலாம், அல்லது சிறிதளவு பாஜக ஆகலாம். அல்லது இரண்டு கட்சியிலும் பலர் மாறலாம். அவர்கள் நிலையில் அது அமையும்.

'கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை', என்று பேசிய காலம்சென்ற முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி.ஜெ.. ஜெயலலிதாவின் வார்த்தைகள் ஐந்தாண்டுகளுக்குள்ளேயே பொய்த்துப் போவதா? அல்லது காப்பாற்றப்படுவதா! என்பதைக் கவனிக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் திமுக எதிர்ப்பு அரசியலைக் கைவிடுவார்களா? என்று தெரியும். கெட்டவனை பகைச்சிக்க கூடத் தேவையில்லை, கூட இருந்தாலே போதும்  அழிவுதான். என்பதற்கு எஸ்பி வேலுமணி சிறந்த உதாரணம், கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் வளர்ச்சி டெண்டர் பெறப்பட்ட ஐபி அட்ரஸ் வரை சிக்குவதில் வேலுமணி மட்டுமல்ல அத்தனை மாஜி மந்திரிகளையும் திருட விட்டு ஆதாரத்தைச் சேகரித்து வைத்துக்கொண்டு ஒரு நவீன அறிவியல் ரீதியாக அரசியல் பரமபதப் பித்தலாட்டம் நடந்துள்ளது. முனுசாமி உள்ளிட்ட ஆடிட்டர் ஒருவரின் ஆதரவுக் கும்பல் திட்டமிட்டு எந்த வாயால் மன்னார்குடி மாஃபியா எனத் தூற்றினார்களோ அதே மன்னார்குடி குடும்பத்து உருப்பினரான இராவணன் அப்போது போட்ட பிச்சை தான் வேலுமணி எம்எல்ஏ வானது என்பது தனிக்கதை  


இராணுவத்தால் யுத்தத்தில் அழிந்தவனை விட ஆணவத்தால் செருக்கு காரணமாக அழிந்தவன் அதிகம். வி.கே. சசிகலா நடராசனின் பிறந்த நாள் என்பது அரசியல் வாழ்வின் அவரது எழுச்சி நாளாக அமைகிறது. திமுக அரசு வி.கே.சசிகலா நடராசனுக்கு வழங்கியுள்ள அரசியல் வாழ்வுப் பரிசு.

அதிமுக வரலாற்றில் என்றாவது இப்படி ஒரு போராட்டம் நடந்ததுண்டா?  முதலில் தரையில் உட்கார்ந்தத கே. பி. முனுசாமி. எடப்பாடி பழனிச்சாமி தள்ளி உட்கார்ந்திருக்கிறார் என்ற உடன் எடப்பாடி அருகே இருப்பவர்களை துரத்தி விட்டு வந்து அவர் அருகில் உட்கார்ந்து விட்டார். அனைத்து சிக்கல்களுக்கும் கே. பி. முனுசாமி முக்கியக் காரணம். சசிகலா உடன் இருந்த சொந்தப் பகையைத் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறார். இவர்கள் நடத்தி வரும் நாடகம் என்பது


இது மக்கள் எதிர்கொள்ளும்  சிக்கல்களுக்கானதா?  இல்லையே

அதை விட எங்கள் தலைவர் மீது போடாதே போடாதே என்கிறார்கள். 

ஓ.பன்னீர்செல்வம்  என்ன மனநிலையிலிருப்பார்?   அவரது தியானம் அம்மா விசுவாசி நாடகம் காலம் கடந்த போதும் முடிவுக்கு வருகிறது மக்கள் உண்மை அறியும் காலம்  கோட நாடு கொலைகள் படு படுபயங்கரமான நிலையில் கட்டளையிட்டது யார்? கைதாவது யார்..? என்ற வினா எழுகிறது. அவசர அவசரமாக ஆளுநரைச் சந்தித்து முறையிடும் அவசர அவசரமானதா.?

- பிரபலமான பத்திரிகையாளர்களில் பலர் கருத்தாக 'அதிர வைக்கிறார் ஸ்டாலின்' என்கிறார்கள் . எகிறித் துடித்து பதைபதைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி  தனது தலைவியின் மரணத்தை கமிசன் போட்டு வரிசையாக காலநீட்டிப்பு செய்தவர்கள், தற்போது வரை என்னவாயிற்று.  இவர்களிடம் ஆட்சி அதிகார பலத்தால் அவரது தலைவியின் பங்களாவில் நடந்த கொள்ளை,கொலைகள் பற்றிய உண்மைகள் வெளியான போதும் தண்டனையில் இருந்து தப்ப முடிந்தது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான்! எடப்பாடியை எட்டப்பனாக்கிய கொட நாடு கொள்ளை,கொலையில் நடந்த உண்மை நிலை. வரப் போகிறது


அந்தக் கொட நாடு எஸ்டேட் பங்களாவில் தான் பல ரகசிய ஆவணங்களை வைத்திருந்தார் ஜெ.ஜெயலலிதா அந்த ரகசிய ஆவணங்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் போல நடித்து தனக்கு துரோகம் இழைத்தவர்களாக கருத்தியவர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களையும், மன்னிப்புக் கடிதங்களையும் அவர் ரகசியமாக வைத்திருந்தாரெனக்கூறப்படுகிறது. ஆகவே, அதை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் எதிர்கால அதிமுக என்ற கட்சியின் லாகானை தன் வசம் வைத்துக் கொள்ளலாமென நினைக்கும் ஒருவர் தான் அதை எடுக்கத் துணிந்திருப்பார்.

அந்த எஸ்டேட்டிற்குள் சென்றவர்கள் – அல்லது அனுப்பப்பட்டவர்கள் – அங்கு நகைகளையோ, பணத்தையோ எடுக்கவில்லை. அதற்கான குறைந்தபட்ச தேடுதல் கூட அவர்களுக்கு இல்லை.

அவர்களை அனுப்பியவர்கள் சொல்லிக் கொடுத்தது போல, அங்குள்ள 99 அறைகளில் சரியாக செல்ல வேண்டிய அறைக்குள் நுழைந்து, எடுக்க வேண்டிய ஆவணங்களை எடுத்தற்கு மேலாக வேறு ஒன்றுமே செய்யவில்லையே! சாதாரண கார் டிரைவர் கனகராஜுக்கும், பேக்கரிக் கடைக்காரர் சயானுக்கும் அந்த ஆவணங்கள் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை.

அவர்கள் நுழையும் போது எப்போதுமே தங்கு தடையில்லாமல் மின்சாரம் உள்ள அந்த இடத்தில் சரியாக மின்தடை ஏற்படுகிறது! 28 சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் செயல் இழக்கின்றன. ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் வெறிச்சோடிய அந்த பங்களவிற்கு சுமார் ஐம்பது காவல் துறையினரை நிறுத்தி இருந்தார்களே. அவர்கள் அன்று என்ன ஆனார்கள்? இதை எல்லாம் கொள்ளை அடிக்கச் சென்றவர்களுக்கு சாதகமாக இவ்வளவு துல்லியமாக செய்தவர் யார்? இதை செய்வதற்கான வசதிகளும், அதிகாரப் பின்புலமும் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவையும் தங்களை ஏவியவர்களுக்காக செய்த அந்த எளியவர்கள் அடுத்தடுத்து ஏன் கொல்லப்பட வேண்டுமென மக்கள் கேள்வி கேட்காததால் இவர்கள் இப்போது நாடகமாடுகிறார்.

இந்தக் கொள்ளைக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரரை பார்த்துச் சென்ற கனகராஜ் சாலை விபத்தில் கொல்லப்படுகிறார். அதே தினம் சயானை கொல்ல நடந்த முயற்சியில் அவர் படுகாயத்துடன் தப்புகிறார். அதே சமயம் அவரது மனைவியையும், மகளையும் பறி கொடுக்கிறார். கொட நாடு பங்களாவில் சி.சி.டிவி கேமாராக்களை ஆபரேட் செய்யும் தினேஷ் மர்மமான முறையில் இறக்கிறார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது உடல் கூட இதுவரை கிடைக்கவில்லை.

இந்த மகா பாவத்திற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமா?.வேண்டாமா .? இந்தக் குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி சயான் தன் ஆசைக்குரிய மனைவியையும், அன்புக்குரிய மகளையும் இழந்து தனித்துவிடப்பட்ட  நிலையில் தானும் கொல்லப்படலாம் என்ற சூழலில் தான், என்ன நடந்தாலும் சரி உண்மைகளை உலகிற்கு சொல்லிவிடலாம் என தவித்து தேடுகிறார் ஒரு நேர்மையான  பத்திரிகை ஆசிரியரை அவருக்குத் தெரிய வருகிறது. தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியரான நமது அன்பிற்குரிய அண்ணன் மாத்யூ சாமுவேல் துணிச்சலானவர். அவரை நம்பிச் சொன்னால் அதை உலகிற்கே தெரியப்படுத்துவார். நமக்கும் பாதுகாப்பு அளிப்பார் எனச் சென்றார். அதன்படியே மாத்யூ சாமுவேலும் பல தடைகளைக் கடந்து. எதிர்ப்புகளைச் சமாளித்து இந்த விவகாரத்தை மக்கள் அறிய அம்பலப்படுத்தினார். அதற்குப் பிறகும் கூட தமிழகத்தின் நேர்மையான ஊடகங்களாகக் காட்டிய பிரபலமான இதழ்கள் , அகில இந்திய ஊடகங்களோ இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பது தான் துரதிர்ஷடமான செயல். அதற்கு அரசியல் விளம்பரங்கள் எனப் பல காரணங்கள் உண்டு.

இராஜதந்திரம் இல்லாத நரித்தந்திரமோ அல்லது சாமார்த்தியமும், சாதுரியமும் மட்டுமே ஒருவரை தொடர்ந்து அரசியலில் காப்பாற்றிவிட முடியாது. ஆட்சி அதிகார பலத்தாலும், மத்திய ஆட்சியாளர்களுக்கு செய்த பணி காரணமாகவும் எடப்பாடி பழனிச்சாமி இது நாள் வரை தப்பித்து வந்தார். தன்னிடமுள்ள அபரிமிதமான பணபலத்தால் எந்தக் குற்றத்தையும் செய்யலாமென எடப்பாடி பழனிச்சாமி நம்பினார். யானைக்கும் அடி சறுக்கும். அது தற்போது சறுக்கியது.


ஆட்சியிலிருக்கும் போது தன்னை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி யாரும் ,பேசவோ எழுதவோ கூடாது என நீதித் துறையையே கூட தனக்கு சாதகமாக திருப்பினார் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில். அதே நீதித்துறை அவர் விவகாரத்தில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறி இன்று வழிவிட்டு நிற்கிறது. சரியான வழியும் காட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தான் கைது செய்யப்படுவோம் என்றதும் இப்போது பதறுகிறார். தமிழக மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் துடிக்காதவர் தனக்கு செய்த குற்றத்திற்கு  ஆபத்தென ஒன்று வந்தது என்றவுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.  தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாகத் தான் சொன்னார். மடியில் கனமில்லையெனில் வழியில் பயப்படுவானேன்.?

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையில் அடையாளச் சின்னமான கோட நாடு எஸ்டேட்டும், பங்களாவும் அவரது மரணத்தைப் போலவே மர்மப் பங்களாவாக மாறி நிற்கிறது. ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்த வளம் கொழிக்கும் எஸ்டேட்டும்,அதில் சகல வசதிகளுடன் அரண்மனைகளை விஞ்சும் வண்ணம் எழுப்பட்ட மிகப் பிரம்மாண்ட பங்களாவும் இன்று பயன்படுத்த யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. உயிர் தோழியாக 35 ஆண்டு உடனிருந்து உதவி காப்புறுதி செய்த குடும்பம் மீதே பழிசுமத்தி வந்த பலனை இப்போது அறுவடை செய்யும் காலம் வரும்போது அவருடன் நெருக்கமாகவும், தளபதிகளைப் போலவுமிருந்த ஒருவர் கூட அவருக்கு விசுவாசமாக இல்லை என்பது அவர் மரணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு அதாவது அவர் அப்பல்லோவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டு இவர்கள் ஏவப்பட்டதிலிருந்து தெரிய வருகிறது. அந்தக் காலகட்டத்தில் சசிகலாவின் முழு நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இப்போது பதவியை தக்கவைத்துக் கொள்ள அவரை எதிர்த்து நடத்தப்பட்ட நாடகம் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தானே இருந்தார். பின்னர் அவருக்கே நம்பிக்கை துரோகம் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக கோடநாட்டை அணுவணுவாக அறிந்து வைத்திருந்த ஒருவர் உண்டெனில் அது அவரது உடன்பிறவாத சகோதரி வி.கே.சசிகலா நடராஜன் தான். ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அங்கு ரெய்டு நடத்தப்பட்ட போது கூட சசிகலா நடராஜனிடம் தான் அனுமதி வாங்கப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த கொலை,கொள்ளைகள் குறித்து ஜெயலலிதாவிற்காகவே  தண்டனையும் அனுபவித்த தியாகம் ஒரு பக்கம் தன் பதவிக்காக நினைவிடத்தில் தியானம் செய்தவர்கள் மட்டுமல்ல இது வரை ஏன் சசிகலா நடராஜன் கூட  வாய் திறக்கவில்லை.என்ற வினாவிற்கு விரைவில் விடை கிடைத்ததால்.? ஏன் அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கோபம் வரவில்லை. தானும் தன் உடன் பிறவா சகோதரியுடன் சுற்றித் திரிந்து, சுகித்துக் கிடந்த அந்த சொர்க்கபுரிக்குள் நடந்த எந்த அநீதிகள் பற்றியும் ஏன் சசிகலா நடராஜன் வாய் திறக்கவே இல்லை. இதற்கான விடை எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும் தானே!

மூத்த பத்திரிகையாளர் பலரும் அறிந்த இந்தக் கருத்து  மக்களின் பார்வைக்கு வந்துள்ளது    இதில் தமது கருத்தாக               "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்".இது ஒன்றே இப்போது இன்னும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும் அப்போது வரை காத்திருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்