காலமான யானை சிவகாமிக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் இறுதி அஞ்சலி

சிவகங்கை மாவட்டம். திருப்புத்தூர்.ஸ்ரீ திருத்தளிநாதர்  திருக்கோவில் ஸ்ரீ சிவகாமி யானை இன்று பகல் 12.30.மணியளவில் இறைவன் திருவடி சேர்ந்தது.       
                         குன்றக்குடி- திருவண்ணாமலை ஆதீனத்தின் ஐந்து கோவில் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தளிநாதர் கோவிலில் 52 ஆண்டுகள் இறைபணி செய்த சிவகாமி யானை உயிரிழந்தது, கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாதிருந்த 54 வயதான சிவகாமி யானை சிறுகூடல்பட்டி விசாலாட்சி  என்பவரால் 1967 ஆம் ஆண்டில் இரண்டு வயது குட்டியாக அப்போதைய அடிகளார் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் முன்னிலையில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக  வழங்கப்பட்ட யானை சிவகாமி கடந்த சில நாட்களாக கால் வலியால் அவதிப்பட்ட நிலையில்

சத்தியமங்கலம் அரசு வனத்துறை மருத்துவர் அசோக்குமார், குன்றக்குடி முன்னாள் கால்நடை மருத்துவர் அன்பு நாயகம், திருப்புத்தூர் கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் கொண்ட மருத்துவக் குழுவினர் யானைக்கு மருத்துவம் பார்த்த நிலையில்  இன்று யானை உயிரிழந்தது.

 யானை இறந்த தகவல் குறித்து குன்றக்குடி  தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடிகளார் கோவிலுக்கு விரைந்து வந்து இறந்த யானை சிவகாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் காரியங்களுக்கான ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டு இறந்த யானை சிவகாமிக்கு அஞ்சலி செலுத்தி மாலை வஸ்திரம் சாத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிவகாமி கோவில் வளாகத்தின் உள்ளேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்