கென்ய மற்றும் நார்வே போர்க் கப்பல்கலுடன், ஐஎன்எஸ் தல்வார் கூட்டுப் பயிற்சி

 பாதுகாப்பு அமைச்சகம்  கென்ய போர்க் கப்பலுடன், ஐஎன்எஸ் தல்வார் கூட்டுப் பயிற்சி

‘கட்லஸ் எக்ஸ்பிரஸ்’ பயிற்சியை முடித்தபின், ஐஎன்எஸ் தல்வார் போர்க்கப்பல், கென்ய போர்க் கப்பல் சூஜாவுடன், கடல்சார் கூட்டுப் பயிற்சியை கடந்த 7ம் தேதி மேற்கொண்டது. 

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அடிப்படைக் கூட்டுப் பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சியின் நிறைவில், மொம்பசா துறைமுகத்தில் சிறப்பான வரவேற்பு அளித்த கென்யா கடற்படையினருக்கு,  ஐஎன்எஸ் தல்வார் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய கடற்படையை கென்ய போர்க்கப்பல் குழுவினர் பாராட்டினர்.பாதுகாப்பு அமைச்சகம்


நார்வே போர்க்கப்பலுடன், ஐஎன்எஸ் தபார் கூட்டுப் பயிற்சி

இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் தபார், நார்வே கடற்படைக் கப்பலுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.

இந்தி கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தபார் போர்கப்பல், கடந்த 5ம் தேதி நார்வே நாட்டின் பெர்ஜென் துறைமுகம் சென்றது. அங்கு இந்திய போர்க் கப்பலுக்கு, நார்வே கடற்படை அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின் நார்வே கடற்படை தளபதி கமோடர் ட்ரான்ட் கிம்மிங்ஸ்ரட், ஐஎன்எஸ் தபார் போர்க்கப்பலில், தலைமை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய போர்க்கப்பலை வரவேற்பதில் நார்வே அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இருநாட்டு உறவுகள் மேம்பட, இதுபோன்ற சந்திப்புகள் எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதன்பின் ‘ஸ்டார்ம்’ என்ற நார்வே போர்க்கப்பலுடன் ஐஎன்எஸ் தபார் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது. கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், கூட்டாகச் செயல்பட இந்தப் பயிற்சி, பரஸ்பரம் பயனுள்ளதாக இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்