கானாடுகாத்தான் கடந்த போது அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மருத்துவத்துறை அமைச்சர்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரப் பகுதிகளிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் (24/7 ) முழு நேர தடுப்பூசி முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டம் வந்த மருத்துவத்துறை அமைச்சர். கானாடுகாத்தான் கடந்த போது அரசு மருத்துவமனையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஆய்வு


மேற்கொண்டார். அதன் பின்னர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் கானல் அறக்கட்டளையின் சார்பில் நிறுவப்பட்ட 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதுஅரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களை கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக மாநில செய்தித்தொடர்பாளர்
அருள்ராஜ் புத்தகத்தை பரிசாக அளித்து வரவேற்றார் சிவகங்கை வட்டம் மதகுபட்டியில் "மக்களைத் தேடி மருத்துவம்" சார்ந்த ஏற்பாடுகளில் நேரில் பங்கேற்றார் வழியில் குன்றக்குடி திருவண்ணாமலை ஐந்து கோவில் தேவஸ்தான ஆதீனத்திற்கு வருகை தந்த தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு வரவேற்பு தந்த குருமகாசந்நிதானம் தவத்திரூ பொன்னம்பல அடிகளார் அவர்கள் மாலை அணிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்