இந்தியாவில் யோகாவுக்கான ஹார்வார்டு போன்ற பல்கலைக்கழகமாக மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் உருவாகும் ஆயுஷ் அமைச்சர்

ஆயுஷ் இந்தியாவில் யோகாவுக்கான ஹார்வார்டு போன்ற பல்கலைக்கழகமாக மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் உருவாகவுள்ளது: திரு சர்பானந்த சோனோவால்அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்கு நிகரான, யோகா பயிற்சியில் உலகத்திலேயே சிறந்த கல்வி நிறுவனமாக உருவாகக் கூடிய வல்லமை மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்திற்கு உள்ளது என்று ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் திங்கள் கிழமை அன்று கூறினார்.

ஆயுஷ் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்திற்கு வருகை தந்த திரு சோனோவால் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றினார்.

“உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கான முதன்மை கல்வி நிறுவனமாக மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தால் உருவாக முடியும். இதை அடைய நாம் சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்காவல் ஹார்வார்டு போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியுமென்றால், நம்மால் ஏன் முடியாது,” என்றார்.

உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகளை மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்க சர்வதேச அணுகல் தேவை என்று அமைச்சர் கூறினார். “அழகான மற்றும் ஆரோக்கியமான உடல்களுக்காக இந்தியாவின் வாயிற்கதவில் மக்கள் காத்திருக்கின்றனர். யோகா கல்வி, பயிற்சி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் தற்போது உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் தேவைப்படுகிறது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் சிறப்பான விடுதி வசதிகள் அதன் மதிப்பை அதிகரிக்கும்,” என்று திரு சோனோவால் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்