புளியந்தோப்பு மற்றும் பெரம்பலூர் குடியிருப்பு சொல்லும் பாடம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தப்பி விடுவார்கள். அலுவலர்கள் சிக்குகிறார்கள்

புளியந்தோப்பு மற்றும் பெரம்பலூர் குடியிருப்பு சொல்லும் பாடம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தப்பி விடுவார்கள். அலுவலர்கள் சிக்குகிறார்கள்

ஆனால் கட்டுமான நிறுவனமும், கையெழுத்துப் போட்டு அதற்கு வழி வகுக்கும் அலுவலர்களும் சிக்கலுக்குள்ளாவர்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஊழலுக்கு பயிற்றுவித்தது தான் தற்போது அணைத்து துறையில் ஊழல் மலிந்து விட்டது

இனியாவது அரசியல்வாதிகள் பிழைக்க தங்கள் வாழ்க்கையைப் பறி கொடுக்கணுமா என்று ஒப்பந்ததாரர்களும், கையெழுத்துப் போடும் அலுவலர்களும் முறையாகச் சிந்தியுங்கள். கமிஷன் கரப்ஷனின்றி


 

நன்றாகப் பாருங்கள் எங்குமே துறைக்கு அமைச்சர் பெயர் ஊழலில் அடிபடுகிறதா என்று. இல்லை .        சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு வளாக விவகாரத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால்  அடுக்குமாடிக் குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லையென சென்னை பெருநகர மாநகராட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது. பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

அபாய நிலையில் புளியந்தோப்பு குடியிருப்பு இருக்கும் காரணத்தால் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்


சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியம் கட்டிய கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் அவல நிலை இது.

கடந்து போன அதிமுக ஆட்சியில் ரூபாய்.112 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தைத் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்


 விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலர் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.  குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த கட்டிடத்தின் தரத்தை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராயாமல் நடவடிக்கைத் தீர்வு வழங்கிய உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், அன்பழகன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று தா.மோ.அன்பரசன் உறுதி அளித்தார்.

இதற்கிடையே அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்து, கட்டிடம் சரியில்லை என செய்தியை கிளப்பிவிட்டால், வைப்புத் தொகையான ரூ.1,50,000 செலுத்தத் தேவையில்லை என்று சிலர் தூண்டிவிட்டதன் காரணமாகவே புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பற்றி அவதூறு பரப்புகின்றனர் என்று புளியந்தோப்பு கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.                மேலும், சென்னை மாநகராட்சி இந்தக் குடியிருப்பை கொரோனா மையமாக பயன்படுத்தியதால்தான் கட்டிடம் சேதம் அடைந்துவிட்டதாகவும் கட்டுமான நிறுவனம் இந்த ஊழலிலிருந்து தப்பிக்க வழி தேடிக் கூறியிருந்த விளம்பரங்கள் வந்த நிலையில் பி.எஸ்.டி நிறுவனத்தின் விளக்கத்துக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.      சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் இராஜேந்திரன் அளித்த விளக்கத்தில்:- கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. சிகிச்சை மையத்துக்கான பொருட்கள் எடுத்துச் சென்றபோதும் குடியிருப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

ஏனெனில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும்போது அந்த குடியிருப்புக்கு ஒருவர் தூக்கிச் செல்லும் படுக்கைகள் உள்ளிட்ட மிக இலகுரக பொருட்களே பயன்படுத்தப்பட்டன. கடினமான தளவாடங்கள் அல்லது கடினமான பொருட்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. எனவே கட்டுமான நிறுவனம் கூறிய சேதாரத்துக்கும், பாதிப்புக்கும் சென்னை மாநகராட்சி காரணமல்ல என விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்