இந்திய ராணுவம் மற்றும் மக்கள் விடுதலை ராணுவம் இடையே வடக்கு சிக்கிமில் ஹாட்லைன் வசதி

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய ராணுவம் மற்றும் மக்கள் விடுதலை ராணுவம் இடையே வடக்கு சிக்கிமில் ஹாட்லைன் வசதி


எல்லைகளில் நம்பிக்கை மற்றும் நல்லுறவுகளை மேம்படுத்துவதற்காக வடக்கு சிக்கிமின் கோங்க்ரா லாவில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதியின் கம்பா சாங்கில் உள்ள மக்கள் விடுதலை ராணுவத்திற்கு இடையே நேரடி தொலைபேசி தொடர்பு (ஹாட்லைன்) நிறுவப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை ராணுவ தினத்தை குறிக்கும் வகையில் 2021 ஆகஸ்ட் 1 அன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

களத்திலுள்ள தளபதிகள் மட்டத்தில் தகவல் தொடர்புக்காக நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் இருநாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கு இடையே உள்ளன. பல்வேறு துறைகளில் உள்ள இத்தகைய நேரடி தொலைபேசி முறை அவற்றை மேம்படுத்துவதிலும் எல்லைகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதிலும் பெரும் பங்காற்றும்.

இரு நாடுகளின் கள தளபதிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஹாட்லைன் மூலம் நட்பு மற்றும் நல்லுறவின் செய்தி பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா