நிதி அமைச்சகம் விசாகப்பட்டிணத்தில் வருமான வரித்துறை சோதனை
விசாகப்பட்டிணத்தை சேர்ந்த ஒரு குழுமம் தொடர்பான தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை ஆந்திரப் பிரதேசம், சத்திஸ்கர், நாக்பூர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள 17 இடங்களில் 2021 ஆகஸ்ட் 25 அன்று வருமான வரித்துறை மேற்கொண்டது.
காய்கறி எண்ணெய், மாங்கனீசு தாது மற்றும் இரும்பு கலப்பு உள்ளிட்ட தொழில்களில் இந்த குழுமம் ஈடுபட்டுள்ளது. கைப்பட எழுதப்பட்டுள்ள குறிப்பேடுகள்/ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத பண பரிவர்த்தனை குறித்த காகிதங்கள் உள்ளிட்டவை தேடுதலின் போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
செலவுகளை அதிகப்படுத்திக் காட்டுதல், எண்ணையை பணத்திற்கு விற்றல் மற்றும் விலைகளை குறைத்து காட்டுதல் ஆகியவற்றில் குழுமம் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. விற்பனையை குறைத்து காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கணக்கில் காட்டப்படாத ரூ 3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் ரூ 40 கோடி தொடர்பான கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்