சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்

குடியரசுத் தலைவர் செயலகம் 

சென்னையில் இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர், டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்சென்னையில் இன்று (2021 ஆகஸ்ட் 2) நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றவுள்ள குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

2021 ஆகஸ்ட் 2 முதல் 6 வரை தமிழ்நாட்டில் தங்கவிருக்கும் குடியரசுத் தலைவர், 2021 ஆகஸ்ட் 4 அன்று வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியை பார்வையிட்டு, 77-வது பணியாளர் பயிற்சியை சேர்ந்த மாணவ அலுவலர்களிடையே உரையாற்ற உள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, முன்பிருந்த சென்னை மாகாணத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. 1921 ஆம் ஆண்டு, இந்திய அரசாணை 1919 ன் படி, முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 9 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் கூடியது. இதன் துவக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் (இங்கிலாந்து அரசரின் தந்தைவழி உறவான) அவர்களால், அப்போதய ஆளுநர் வெல்லிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் துவக்கிவைக்கப்பட்டது
இந்திய அரசாணை 1935 ன் படி, சென்னை மாகாண சட்டவாக்க அவை, ஈரவைகளாக (முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை) அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சட்டமன்றம் முறையே ஜூலை மாதம்  1957 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது.தற்போது  எண்ணிக்கையில் மொத்த உறுப்பினர்கள் 234. ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா