சத்தியம் தொலைக்காட்சி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்சிவகங்கை மாவட்டத்தின் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி  ஒளிப்பதிவாளர்கள்;,புகைப்படக் கலைஞர்கள், கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் 16 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடைபெற்றது.சென்னையில்  செய்தி  தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து  பட்டாக்கத்தியுடன் தாக்குதலில்  ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம் கல்மண்டபம் பகுதியில்  செய்தி நிறுவனமான சத்தியம் தொலைக்காட்சி  இயங்குகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 7 மணிக்கு குஜராத் மாநில பதிவெண் கொண்ட ஷிஃப்ட் காரில் வந்த மர்ம நபர் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார்.

அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாகக் கூறியதால்   ஊழியர்கள் அனுமதித்துள்ளனர். வரவேற்பறைக்கு சென்ற  மர்ம நபர் பேசிக்கொண்டிருக்கும்போது தனது கையிலிருந்த கிட்டார் பேக்கில் பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்து வரவேற்பறையில் இருந்த கண்ணாடி ,மேஜை, டிவி, இருக்கைகள், கம்ப்யூட்டர், கதவு என அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில்


சென்னையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதில் தொடர்புடைய அந்தக் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர் .குற்றத்தின் தன்மை கருதி குற்றமிளைத்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டப் பிரிவுகளின் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்;


இச் சம்பவங்கள் போல இனிமேல் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம், பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற  வலியுறுத்தியும்; சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றதில் மூத்த

பத்திரிக்கையாளர் நேமத்தான்பட்டி சீனிவாசன், தலைமை தாங்கினார்.

சத்தியம் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் பாஸ்கர் வேலு  வரவேற்றார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி; ஐ.சி.டி.எஸ். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க மாநில 

பொதுச்செயலாளர் சிவகங்கை வாசுகி; ஆகியோர் ஆதரவு தெரிவித்து விளக்க உரையாற்றினார்.

நிறைவாக  பத்திரிகையாளர்  பொன்ராஜ் அனைவர் சார்பிலும் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் புகைப்பட கலைஞர்கள் என நாற்பத்தி எட்டு நபர்கள் கலந்துகொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டியையைச் சந்தித்தும். மற்றும் காவல்துறையினரிடமும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக் கொடுக்கப்பட்டது.

மேலும் சிவகங்கை செய்தியாளர்களுக்கான "அலுவல் அறை" ஒதுக்கி தர வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி அவர்களிடம் வலியுறுத்தினர்.


உரிய நடவடிக்கை எடுத்து அலுவலக இடம் ஒதுக்கித் தருவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உறுதியளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்