தமிழகத்தின் இரு தலைமை ஆசிரியைகள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு

 தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு தலைமை ஆசிரியைகளுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, நாடு முழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, அன்று மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விருதுக்கு, தமிழகத்தில்  105 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில், தேசிய விருதுக்கு தேர்வான 44 நபரின் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டது.


தமிழகத்தின் இரண்டு தலைமை ஆசிரியைகள் விருதுக்கு தேர்வாகியுள்ளார் . திருச்சிராப்பள்ளி மணிகண்டம், பிராட்டியூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி; ஈரோடு, மொடக்குறிச்சியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்