மருந்து நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு தேசிய மருந்து விலை ஆணையகம் ஆதரவு அளிக்கிறது என்ற ஊடக செய்திகளுக்கு ஆணையகம் கடும் கண்டனம்

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்


மருந்து நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு தேசிய மருந்து விலை ஆணையகம் ஆதரவு அளிக்கிறது என்ற ஊடக செய்திகளுக்கு ஆணையகம் கடும் கண்டனம்

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் மருந்துத் துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருந்து விலை ஆணையகம், குறிப்பிட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பு விலையை நிர்ணயித்து, இதர மருந்துகளின் விலையை கண்காணித்து, மருந்துகளின் மலிவு தன்மை மற்றும் அணுகலை உறுதி செய்து வருகிறது.

அதிகபட்ச சில்லறை விலை ஒரே போல இருந்தாலும், தேசிய மருந்து விலை ஆணையகத்தின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் பல மருந்துகளை வெவ்வேறு விலைகளுக்கு வெவ்வேறு துறைகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மருந்து நிறுவனங்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஜம்மு மருந்தக விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருப்பதாக டெய்லி எக்ஸ்கெல்சியர் என்ற நாளிதழ் செப்டம்பர் 22-ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

மருந்து நிறுவனங்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு  தேசிய மருந்து விலை ஆணையகம் ஆதரவளிக்கிறது போன்ற பொய்யான செய்திகளை ஆணையகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை, 2013, பத்தி-20 இன் கீழ் தெரிவித்துள்ளவாறு, குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளின் உச்சவரம்பு விலை மற்றும் புதிய மருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட அதிகமாக வசூலிப்பவர்கள் மீதும், இதர மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையைவிட 10% அதிகமாக வசூலிப்பவர்கள் மீதும் கடந்த 12 மாதங்களில் தேசிய மருந்து விலை ஆணையகம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது என்பதை குறிப்பிடுவது அவசியமாகிறது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலை/ அதிகபட்ச சில்லறை விலையைவிட  குறைவாக மருந்து நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளுக்கு  விலையை நிர்ணயம் செய்வது ஆணையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வராது.  தேசிய மருந்து விலை ஆணையகத்தின் ஒழுங்குமுறை கட்டமைப்பின் வரம்பிற்குள் இயங்காத நிறுவனங்களால் முற்றிலும் வணிக நோக்கத்திற்காக இதுபோல் செய்யப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்