மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாரமன், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்


.மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாரமன் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

2021 செப்டம்பர் 12 அன்று மதியம் 12.30 மணிக்கு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.


திரு. எஸ். வெங்கேடஷ்வர், தலைமை இயக்குநர் (தென் மண்டலம்), மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் திருமிகு. கனிமொழி கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர், தூத்துக்குடி, திருமதி.கீதா ஜீவன், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், தமிழக அரசு, திரு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தமிழக அரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.


முன்னதாக, 2021 செப்டம்பர் 12 அன்று காலை 10.15 மணிக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொள்கின்றனர்.

2021 செப்டம்பர் 12 அன்று மாலை 6.15 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மத்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்புகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா