பட்டா பெயர் மாற்றத்திற்கு இலஞ்சம் வாக்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது வீட்டில் சோதனை ரூ.12 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பட்டா பெயர் மாற்றத்திற்கு இலஞ்சம் வாக்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது அதன் விபரம் வருமாறு, கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டம் நண்டுக்குழியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் அரிகிருஷ்ணன், (வயது49); இவரது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய மனுக்


கொடுத்தார்.மனுவைப் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலரான,செண்பகவள்ளி, (வயது38); ரூபாய். 10 ஆயிரம் பணம் இலஞ்சம் கொடுத்தால் மாற்றம் செய்து தருவதாகக் கேட்டார். கொடுக்க விரும்பாத அரிலிருஷ்ணன்  இது குறித்து இலஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர். அலுவலகத்தில் புகார் செய்தார். அவர்களிடம் தனது பணம்  8,000 ரூபாயை கொடுக்க அதை பினாப்தலின் தடவி சாட்சிகள் முன் வைத்து அரிகிருஷ்ணனிடம்  ஒரு கவரில் வைத்து கொடுத்தனர்.

அதன்படி காட்டுக்கூடலுார் அலுவலகத்தில்  கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளியை  காலை நேரத்தில் சந்தித்து பணத்தை அரிகிருஷ்ணன் கொடுத்தார்.அதை அவர் பெற்றபோது ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறை துறை துணை கண்காணிப்பாளர் ராஜாமெல்வின்சிங் தலைமையில் உள்ள டீம் கிராம நிர்வாக அலுவலரை பிடித்தனர் பின்னர் பணம் கைப்பற்றி  கைதுசெய்தனர். அவரை கடலுார் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தில் உள்ள அவரது வீட்டிலும்  விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கு இருந்த ரூபாய்.12 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து மேலும் விசாரிக்கின்றனர்.  சமீபத்தில் சென்னை     உயர்நீதிமன்றம் மதுரை கிளை: ‛‛அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்க கூச்சப்படுவதே இல்லை," என, உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் லஞ்சம் பெற்ற போது கைதான மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது:

அரசு அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும் போது கூச்சப்படுவதே இல்லை. இலஞ்ச வழக்கில், ஒருவரைக் கைது செய்தால், அவரது வீடு, அலுவலகங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டும். காவல்துறையினரின் விசாரணை பெயரளவில் உள்ளது. முறையான விசாரணை இல்லை. இலஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவிலேயே உள்ளதென நீதிபதி தெரிவித்தார். அதன்படி அந்த கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் சோதனை செய்த போது கிடைத்த பணம் ரூபாய் 12 இலட்சம் அப்பாவி மக்கள் பணம் இலஞ்சப் பேய்கள் வீட்டில் பதுங்கிய நிலையில் கைப்பற்றி வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. பின்னர் நீதிமன்றம் முன் நிறுத்தி பெண் கிராம நிர்வாக அலுவலர் நீதிமன்றக் காவலில் சிறைக்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா