முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரலாற்று நாயகர் - வ.உ.சி 150 ஆம் ஆண்டு விழா

வரலாற்று நாயகர் - வ.உ.சி              பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

சுதந்திரப் போராட்ட வீரர் திரு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

சுதந்திரப் போராட்ட வீரர் திரு வ. உ.  சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“திரு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு, தொலைநோக்குப் பார்வை உடைய அவரை நினைவு கூர்கிறேன். நமது சுதந்திர இயக்கத்தில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.‌ தற்சார்பு இந்தியா குறித்து அவர் திட்டமிட்டதுடன், அதை நோக்கி முக்கிய நடவடிக்கைகளை, குறிப்பாக துறைமுகம் மற்றும் கப்பல் துறைகளில் மேற்கொண்டார். அவரால் நாம் மிகுந்த எழுச்சி அடைகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.


“கப்பலோட்டிய தமிழன்”, “செக்கிழுத்த செம்மல்” என சிறப்புப் பட்டங்கள் கொண்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்து 149 ஆண்டுகள் முடிந்து 05.09.2021 அன்று 150ஆம் ஆண்டு பிறக்கிறது! வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் மாதம்  5 ஆம் தேதி 1872 ஆம் ஆண்டில் பிறந்தார்  மிகச்சிறந்த வழக்கறிஞர்   இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கையில் கொழும்புக்குமிடையே கடல் வழிப் போக்குவரத்து மேற்கொண்டதனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரசால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவரின் வழக்கறிஞர் உரிமமும்  பறிக்கப்பட்டது தியாக சீலர் வ.உ.சியை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகமாக  மாற்றப்பட்டதுடன் தூத்துக்குடியில் அவர் பெயரில் ஒரு அரசு கல்லூரியும், கோயமுத்தூரில்       வ.உ.சி பெயரில்  பூங்கா அமைக்கப்பட்டது ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய கப்பலோட்டிய தமிழன்வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை செப்டம்பர் மாதம்  5 ஆம் தேதி 1872 ஆம் ஆண்டில் பிறந்தார்  மிகச்சிறந்த வழக்கறிஞர்   இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கையில் கொழும்புக்குமிடையே கடல் வழிப் போக்குவரத்து மேற்கொண்டதனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரசால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவரின் வழக்கறிஞர் உரிமமும்  பறிக்கப்பட்டது தியாக சீலர் வ.உ.சியை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகமாக  மாற்றப்பட்டதுடன் தூத்துக்குடியில் அவர் பெயரில் ஒரு அரசு கல்லூரியும், கோயமுத்தூரில்       வ.உ.சி பெயரில்  பூங்கா அமைக்கப்பட்டது ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலின் படி 3 செப்டம்பர் 2021 லவ் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு  சென்னை துறைமுகம் பிரதான நுழைவு வாயிலில் உள்ள அவரது திருவுருவச் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை , அரசுச்செயலாளர் மகேசன்காசிராஜன் இ.ஆ.ப. , செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப. , சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் IRTS , துறைமுக பொறுப்புக் கழக செயலாளர். தாரா ஸ்வீர்தா ஆகியோர் உடனிருந்தனர் மதுரை மத்திய தொகுதியில் சிம்மக்கல் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது  பிறந்தநாளை முன்னிட்டு நிறுவப்பட்டுள்ள வெண்கல திருவுருவ சிலை திறப்புவிழாவில் அவரது பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம்  மற்றும் தமிழகத்தின் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.




பன்முக ஆளுமை கொண்ட வ.உ.சி. வழக்கறிஞர்; தமிழறிஞர்; இந்திய விடுதலைப் போராட்டத்தை வீரஞ்செறிந்த வெகு மக்களின் வீதிப் போராட்டமாக நடத்தியவர்; தமிழ்நாட்டின் முதல் தொழிற்சங்கத் தலைவர். தொழிலாளர் உரிமைகளுக்காக தூத்துக்குடி கோரல் மில் நூற்பாலையில் 1908 ஆம் ஆண்டு சூலை மாதம்  22 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி ஆங்கில ஏகாதிபத்திய வணிகக் கொள்ளையர்க்கு மாற்றாக மலிவுக் கட்டணத்தில் பயணிகள் கப்பல் நடத்தியவர்; விடுதலைப் போராட்ட உரைகளுக்காக 20 ஆண்டும், விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு தங்குமிடமும் உணவும் வழங்கிப் பராமரித்ததற்காக 20 ஆண்டும் விதிக்கப்பட்டு இரண்டையும் தனித்தனியே அனுபவிக்க 40 ஆண்டுகள் சிறையில் இருக்கத் தண்டனை பெற்றவர்; கோயமுத்தூர் சிறையிலேயே செக்கிழுத்தவர்; இலண்டன் பிரிவி கவுன்சில் மேல் முறையீட்டில் 40 ஆண்டு காலத் தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்ட காலத்தில்; திருக்குறளுக்கு உரை எழுதிய தும்; மெய்யறிவு இலக்கிய நூல்களைப் படைத்தவர்; சமூகநீதிக் கொள்கையைக் கடைபிடித்தவர்; பிராமணரல்லாதார்க்கு அப்போதய காலத்தில் இடஒதுக்கீடு கேட்டவர்; சாதிவெறி, மதவெறிக்கு எதிரானவர்; பிற்காலத்தில் வறுமையில் மிகவும் வாடியவர் இறுதிக் காலத்தில் மண்ணெண்ணெய் வண்டி தள்ளி வாழும் நிலை ஆனபோதும் தேசபக்தி தெய்வ பக்தி மாறாது வாழ்ந்த தியாகி  என பன்முகத் தன்மை கொண்டு - தமிழினத்தின் அறிவும், வீரமும், அறமும் கொண்டு விளங்கிய தியாகசீலர் வ.உ.சி.  வாய்ச்சொல் வீரர் அல்லர் வ.உ.சி; களப் போராளி என்பதை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பாடினார் :

“பேசி விட்டே சுயராஜ்யம் பெறலாமென்று                          பெரியபலத் தீர்மானக் கோவை செய்து

காசு, பணப் பெருமையினால் தலைவராகிக்                                காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து

தேசநலம் தியாகமின்றி வருமோ என்று    திலகர் பெருமான் செய்த பெருங்கிளர்ச்சி சேர்ந்து

ஓசைப்படா துழைத்த பல பெரியோர் தம்முன்                                      உண்மைமிக்க சிதம்பரமும் ஒருவனாவான்!”.

ஆயுதம் ஏந்தாத வெகுமக்கள் போராட்டத்தை வீச்சுமிக்கதாக நடத்திக் காட்டியவர் வ.உ.சி. பெருந்திரள் ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் முதலியவற்றை நடத்தினார். பிரிட்டிஷ் கிழக்கிந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமைச் செயல்பாடுகளை மக்களைக் கடைபிடிக்க வைத்தார். இந்திய விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களுக்கு, வெள்ளைக்கார விசுவாசிகளுக்குக் கடைகளில் பொருட்கள் விற்க மறுத்தனர்; துணி வெளுக்க மறுத்தனர்; முடிதிருத்த மறுத்தனர். இவ்வாறு விடுதலைப் போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக நடத்தி

மக்களிடையே வ.உ.சி. பேசிய சொற்பொழிவுகளைக் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் காவல்துறையினர் பதிவு செய்தனர். அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட வழக்குக் குற்ற அறிக்கையில் 1908 ஆம் ஆண்டில் வ.உ.சி. பேச்சு பதிவாகியுள்ளது. 


“மக்கள் ஒன்று சேர்ந்தால் வெள்ளையரை விரட்டி விடலாம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று தெரிந்தாலே போதும்; வெள்ளையர்கள் தாமாகவே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேறி விடுவார்கள். 


“இந்தியாவில் மிஞ்சிப் போனால் 50 ஆயிரம் வெள்ளையர்கள் தான் இருப்பார்கள். அவர்களைப் பலாத்காரமாக நாம் வெளியேற்ற முடிவு செய்தால் அது மிகவும் எளிமையான காரியம்தான் ஆனாலும், நாம் பலாத்காரத்தில் ஈடுபடக்கூடாது. அதே சமயத்தில் வெள்ளையரைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை.


“இந்தியர்களாகிய நாம் ஏற்கெனவே தீர்மானித்தபடி பிரிட்டிஷ் துணி, சர்க்கரை, எனாமல் பாத்திரம் முதலிய பொருள்களை வாங்காமல் பகிஷ்கரித்தால் ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவார்கள்.


“சவரத் தொழிலாளிகள் அன்னியத் துணி அணிந்தவர்களுக்கும் அன்னிய ஆதரவாளர்களுக்கும் தாங்கள் இனிமேல் சவரம் செய்வதில்லை என்று உறுதி எடுத்து சத்தியம் செய்திருக்கிறார்கள். இந்த உணர்வு மற்ற தொழிலாளர்களுக்கும் வந்தால் பிரிட்டிஷ்காரர்களால் இந்த நாட்டில் நான்கு நாள் தாக்குப் பிடிக்க முடியுமா? வருவதெல்லாம் வரட்டும் நாம் எதற்கும் அஞ்சாமல் கடமையைச் செய்வோம்! வெற்றி நிச்சயம்!” 

- (சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், சிவலை இளமதி நூலில்).

திருநெல்வேலி, தச்சநல்லூர், தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் போராட்டம் வீச்சுப் பெற்றது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் காவல்துறை அடக்குமுறையும் தீவிரப்பட்டது. தன்னைச் சந்திக்க வருமாறு திருநெல்வேலி  ஆங்கிலேயக் கலெக்டர் விஞ்ச் வ.உ.சிதம்பரம் பிள்ளையை அழைத்தார். 12.03.1908 அன்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். பிரிட்டிஷ் கலெக்டர்

விஞ்சுக்கும் வ.உ.சி.க்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபின்னர் அதைக் கவிதையாக்கினார் பாரதியார். 

விஞ்ச்துரை : நாட்டில் எங்கும் சுதந்திர வாஞ்சையை  நாட்டினாய்; கனல் மூட்டினாய்..         ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல்   ஓட்டினாய்; பொருள் ஈட்டினாய்

வ.உ.சி.:பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ?            அழுது கொண்டிருப்போமோ?ஆண்பிள்ளைகள் அல்லமோ?            உயிர் வெல்லமோ?

விஞ்ச் :வாட்டியுன்னைச் சிறைக்குள்ளே மாட்டுவேன்; வலி கூட்டுவேன்

வ.உ.சி. :சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ? ஜீவன் ஓயுமோ? என்பதே

வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டனர். மாபெரும் மக்கள் போராட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில்  வெடித்தது. நகராட்சி அலுவலக எண்ணெய்க் கிடங்கு, துணைப் பதிவாளர் அலுவலகம் எனப் பல இடங்கள் தீக்கிரையாயின. நெல்லை இந்துக் கல்லூரி மாணவர்கள் சிறையை உடைத்து வ.உ.சி.யை மீட்போம் எனப் புறப்பட்டனர். 

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மாண்டதுடன் பலர் படுகாயமுற்றனர். தொடர்ந்து நான்கு நாட்கள் கலவரமும் போராட்டமும் நீடித்தது. வ.உ.சி. மாபெரும் மக்கள் தலைவரானார்.

ஆறாண்டு சிறைத் தண்டனை உறுதியானது. 1912 ஆம் ஆண்டின் இறுதியில் நான்கு  ஆண்டு சிறையிலிருந்தவர் தண்டனைக் கழிவு பெற்று விடுதலை ஆனார். காங்கிரசுக் கட்சியில் வ.உ.சி.க்கு உரிய இடமில்லை என்றாலும். காங்கிரசுக்காரராகவே தொடர்ந்தார். சமூகச் சிக்கல்கள், மதம், பிராமணியம், இலக்கியம் முதலிய ஆய்வுகளில் இறங்கினார். பிராமணியத்தை, மூட பக்தியை எதிர்த்தார். பெரியாருடன் சில கூட்டங்களில் கலந்து கொண்டார். சைவ சித்தாந்தத்தில் உறுதியுடனிருந்தார். கடவுள் மறுப்பாளரையும் மதிப்புடன் ஏற்றார்.

“மக்கள் பல்வேறு பெயர்களோடும் வடிவுகளோடும் காணப்படினும் அவர்களெல்லாம் மக்கள் சாதியினரேயாவது போல, மதங்கள் பலவேறு பெயர்களோடும் கொள்கைகளோடும் காணப்படினும் அவைகளெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே இறைவனைப் பற்றியே பேசுகின்றன” என்றார் வ.உ.சி. (இந்திய விடுதலைப் போரில் வ.உ.சி. - என். திரவியம், விஜயா பதிப்பகம் வெளியீடு நூல்).

வ.உ.சி.யின் விடுதலைப் போராட்டங்களும் சமூகவியல் சிந்தனைகளும் வரலாற்றில் நிலைக்கும்; வளரும். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பிடரியைப் பிடித்து உலுக்கிப் போராடிய வ.உ.சி.யை அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைமை அப்போதும் எப்போதும் கண்டுகொள்ளவில்லை.

காங்கிரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வரலாற்று நூலில் வ.உ.சி.யின் பெயரே இல்லை. வடநாட்டவர்க்கு வ.உ.சி.யைத் தெரியாது. ஆனால், தமிழ்நாட்டில் வடநாட்டுத் தலைவர்கள் மட்டுமல்ல, வடநாட்டுச் சிறுசிறு நிகழ்வுகளும், நினைவுச் சின்னங்களாக - திடல் பெயர்களாக - தெருப் பெயர்களாக எங்கும் நிறைந்திருக்கின்றன. 

நம் வீரத்தமிழர், தமிழ்ச் சான்றோர் வ.உ.சி.யின் நினைவுகளைப் போற்றுவோம்! வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டு விழாவை சென்னைப் பட்டணத்திலிருந்து சிற்றூர் வரை எடுப்போம் என்ற தமிழ்நாடு அரசின் செயல் வரவேற்பு பெறுகிறது. பட்டி தொட்டி எங்கும் .வ.உ.சி 150 வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை நகர் வ.உ.சி பேரவை சார்பாக வைக்கப்பட்டுள்ள படத்திற்கு சிவகங்கை நகரில் பல்வேறு கட்சிகளும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திமுக நகர் செயலாளர் சிஎம். துரை ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர் மரியாதை செய்தனர் .அந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல இடங்களில் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. வா.உ.சி புகழ் மனம் மாறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...