அரசு பங்குகளின் ஏல விற்பனை அறிவிப்பு ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17 ஆம் தேதி

நிதி அமைச்சகம் அரசு பங்குகளின் ஏல விற்பனை அறிவிப்பு


2023ம் ஆண்டு அரசு பங்கில் 4.26 சதவீதத்தை ரூ.3000 கோடிக்கும், 2031ம் ஆண்டு அரசு பங்கில் 6.10 சதவீதத்தை ரூ.14,000 கோடிக்கும், 2061ம் ஆண்டு அரசு பங்கில் 6.76 சதவீதத்தை ரூ.9,000 கோடிக்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த ஏலங்கள் மும்பையில் ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்தப்படும். அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனையில் 5 சதவீதம் வரை, தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போட்டியில்லா ஏல முறை திட்டப்படி ஒதுக்கீடு செய்யப்படும்.

போட்டி மற்றும் போட்டியற்ற ஏலங்களை ரிசர்வ் வங்கியின் இ-கியூபர் அமைப்பில் மின்னணு  முறையில் செப்டம்பர் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும்.

போட்டியில்லா ஏலங்கள் காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணிக்குள்ளும், போட்டியுடன் கூடிய ஏலங்கள் காலை 10.30 முதல் காலை 11.30 மணிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஏலங்களின் முடிவுகள் செப்டம்பர் 17ம் தேதி அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை செப்டம்பர் 20ம் தேதி செலுத்த வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா