சுங்கத்துறை சட்டம் 1962 (1962-ல் 52) பிரிவு 14-ல் அளிக்கப்பட்ட‍ அதிகாரத்தின் பரிமாற்ற விகித அறிவிக்கை எண். 74/2021- சுங்கம் (என்.டி.) திருத்தங்கள்

பரிமாற்ற விகித அறிவிக்கை எண். 74/2021- சுங்கம் (என்.டி.)


சுங்கத்துறை சட்டம் 1962 (1962-ல் 52) பிரிவு 14-ல் அளிக்கப்பட்ட‍ அதிகாரத்தின் படி, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், எண் 71/2021-சுங்கத்துறை (என்.டி) 2021 செப்டம்பர் 2-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் திருத்தங்களை செய்துள்ளது. இது 2021 செப்டம்பர் 17-ல் இருந்து அமலுக்கு வருகிறது.


ஒரு ஆஸ்திரேலிய டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 55.10 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 52.75 என்றும் இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.


ஒரு பஹ்ரேனிய தினாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 201.40 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 189.00 என்றும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கனடிய டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 59.25 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 57.15 என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சீன யுவானுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 11.60 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 11.25 என்றும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 88.45 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 85.30 என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 74.40 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ 72.70 என்றும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா