பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அசாம் மாநிலத்தில் 2 நாள் பயணம்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, அசாம் மாநிலத்தில் 2 நாள் பயணம்


மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, 2 நாள் பயணமாக நாளை அசாம் செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, பழங்குடியினர் மேம்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட வன உற்பத்தி பொருட்கள், வன்தன் திட்டம், பழங்குடியினர் தயாரிப்பு உணவு பொருட்கள் பதப்படுத்தும் திட்டம்(TRIFOOD) போன்றவற்றை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா ஆய்வு செய்கிறார்.

டிரைபெட் அமைப்பின் நிர்வாக இயக்குனர் திரு பிரவீர் கிருஷ்ணா மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.

இந்த 2 நாள் பயணத்தின் போது, அசாம் ஆளுநர் திரு ஜகதீஷ் முக்கி, அசாம் முதல்வர் திரு ஹிமானந்த பிஸ்வாசர்மா உட்பட பலருடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இது தவிர பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

திட்ட பணிகளை,  பழங்குடியினர் மேம்பாட்டு திட்டங்களில் உள்ள சவால்கள் மற்றும் முன்னேற்றங்களை ஆய்வு செய்வது போன்றவை தான் மத்திய அமைச்சரின் 2 நாள் பயணத்தின் நோக்கம்.  நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தில் முழுமையான மாற்றத்தை கொண்டு வருவதே இந்த திட்டங்களின் நோக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா